பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கொரோனாவினால் 49வயதான ஒருவர் மரணம்! வவுனியாவில் அடக்கம்

கோவிட் தாக்கத்தால் கிளிநொச்சியில் மரணமடைந்த வவுனியா நபரின் சடலம் பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மின்சார மயானத்தில் இன்று (12.05) தகனம் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, பம்பைமடு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட கற்பகபுரம் பகுதியில் வசிக்கும் 49 வயதுடைய நபர் ஒருவர் கடந்த 23 ஆம் திகதி கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் உள்ள கோவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று (11.05) இரவு மரணமடைந்தார்.

மரணமடைந்த நபரின் சடலம் சுகாதாரப் பிரிவினரால் எடுத்துச் செல்லப்பட்டு, வவுனியா நகரசபையின் பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

பாடசாலை ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவு அரசு நடவடிக்கை

wpengine

அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை

wpengine

மின்னல் ரங்காவினால் மூடிமறைத்த விபத்து! ரங்கா கைது செய்யப்படலாம்.

wpengine