செய்திகள்பிரதான செய்திகள்

கொரியாவில் e-08 விசா மூலம், 8 மாத பருவகால வேலை வாய்ப்பு..!!!

கொரிய குடியரசின் விவசாய நடவடிக்கைகளுக்கான பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொரிய குடியரசின் E-08 வீசா வகை (பருவகால தொழிலாளர்கள்) கீழ் இலங்கை தொழிலாளர்களை இணைத்துக் கொள்வதற்கு வசதியளிக்கும் வகையில் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதில் ஆர்வம் காட்டுகின்ற கொரியாவின் உள்ளுராட்சி நிறுவனத்துடன் கலந்துரையாடுவதற்கும் 2025.02.19 ஆம் திகதி மற்றும் 2025.07.01 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொரியாவின் போசோங்க் உள்ளுராட்சி நிறுவனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பெறுபேறாக இலங்கையில் பருவகால தொழிலாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் மற்றும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இலங்கையின் பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழ் குறுகியகாலம் (உயர்ந்தபட்சம் 08 மாதங்கள் வரை) போசோங்க் பிராந்தியத்தில் விவசாயக் கிராமங்களில் பணியாற்றி வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்காகவும், எமது நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டுவதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

அதற்கமைய, உத்தேச புரிந்துணர்வு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் போசோங்க் உள்ளுராட்சி நிறுவனத்துடன் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டங்களில் திருத்தம்

wpengine

கபாலி தோல்வி படம் : வைரமுத்து பேச்சால் பரபரப்பு

wpengine

பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவார்களாக இருந்தால்! மீள தடை விதிக்கப்படும்

wpengine