செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

கேக் மற்றும் தேநீர் உட்கொண்ட இளைஞர் மயக்கமடைந்த நிலையில் மரணம்.

பழைய புகையிரத நிலைய வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கேதீஸ்வரன் அசாந் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்…

குறித்த இளைஞன் நேற்றையதினம் தனது வீட்டில் கேக் மற்றும் தேநீர் என்பன உட்கொண்டு சிறிது நேரத்தில் மயக்கமுற்றுளார்.

பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது..

Related posts

பெருந்தலைவர் பிறந்த மண்ணில் “மரத்திற்கு மகுடம் மண்ணிற்கு மகிமை” பெருவிழா

wpengine

சுதந்திர தின நிகழ்வில்! பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கு அமைதி தேவை

wpengine

சொற்ப டாலருக்கு ஆசைப்பட்டு ஜனநாயகத்தை விற்று விடாதீர்கள்

wpengine