பிரதான செய்திகள்

குருநாகல் மாவட்ட மு.கா முக்கியஸ்தர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

(ஊடகப்பிரிவு)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளியுமான இக்பால் ஷெரீப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார்.

மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகரசபை தலைமை வேட்பாளரும், குருநாகல் மாவட்ட இளைஞர் இணைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீன் முன்னிலையில், மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட

அவர் கூறியதாவது,

மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பின்னர், இன்றைய காலகட்டத்தில், மக்களுக்கு சேவை செய்யக் கூடிய சேவைத் தலைவனாவும், எமது சமூகத்தின் உரிமைக் குரலாகவும், நாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பார்க்கின்றோம்.

மக்கள் காங்கிரஸின் தலைமைத்துவம் மற்றும் அந்தக் கட்சியின் கொள்கைகளின் பால் ஈர்க்கப்பட்டதன் காரணத்தினாலேயே, நான் மக்கள் காங்கிரஸுடன் இணைந்து கொண்டேன்.

அத்துடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகின்றது. கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் துணிச்சலும், உறுதியும் மிக்க இந்த முடிவு பாராட்டத்தக்கதும், வியக்கத்தக்கதுமாகும்.

அந்தவகையில், எதிர்வரும் காலங்களில் மக்கள் காங்கிரஸுடன் இணைந்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரத்தினை பலப்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர் குருநாகல் முன்னாள் நகரபிதா அல்ஹாஜ் ஷெரீபின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

பசில் ராஜபக்ஷ மீண்டும் கைது

wpengine

பண மோசடி தொடர்பில் முன்னாள் மாநகர சபை பெண் உறுப்பினர் கைது!

Editor

கடற்படையினரால் தாக்கப்பட்ட மன்னார் மீனவர்கள் முறைப்பாடு செய்ய அஞ்சுகின்றனர்!

Editor