பிரதான செய்திகள்

குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அஷார்தீனின் முயற்சியினால் சுகாதார சேவை மையம்!

குருநாகல், தெலியாகொன்னை கிராம மக்களின் நீண்ட காலத் தேவையாக இருந்த “மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சுகாதார சேவை மையம்”, 12 வருடங்களுக்குப் பின்னர் தெலியாகொன்னையில் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தெலியாகொன்னை பிரதேசவாழ் மக்கள், தமது மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம் குறித்த சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக, குருநாகல் நகருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையே காணப்பட்டது.

இந்நிலையில், குறித்த சேவையினை தெலியாகொன்னை கிராமத்திற்கு மீண்டும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், குருநாகல் மாநகரசபை உறுப்பினர் அஷார்தீன் மொய்னுதீனின் முயற்சியில், மேற்படி சுகாதார சேவை மையம், நேற்று (27) தெலியாகொன்னை பிரஜா கட்டிடத்தில், நகர பிதா துஷார சஞ்சீவ அவர்களினால் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்களான பன்து ஜயசேகர, மொஹம்மட் ரிஸ்வி, முன்னாள் உறுப்பினர்களான அப்துல் சத்தார் மற்றும் ஜெய்னுல் ஆப்தீன், மாநகரசபை ஆணையாளர் மற்றும் அதிகாரிகள், பிரதான வைத்தியர், தெலியாகொன்னை சிவில் அமைப்புகளின் தலைவர்கள், கிராம உத்தியோகத்தர் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள், தாய்மார்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

வவுனியா தொகுதி ரீதியாக மூன்றும், விகிதாசார முறையில் மூன்றும்

wpengine

கத்தாருடன் தூதரக உறவு ’கட்’ – ஏழாவது நாடாக மாலத்தீவுகள்

wpengine

ரணிலின் சதிக்கு பின்னால் அமைச்சர் ஹபீர் ஹாசிமா?

wpengine