Breaking
Fri. Apr 19th, 2024

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் மன்னார் மாவட்டத்தில் கடல் மாசாக்கம் மற்றும் எண்ணைய் கசிவு திட்டம் சார்பான கருத்தரங்கு நேற்று(27) காலை 9 மணியளவில் மன்னார் ஆகாஷ் மண்டபத்தில் இடம் பெற்றது.

எண்ணை கசிவு மற்றும் அதற்கான திட்ட முகாமைத்துவ குழுக்களை நிறுவுதல் மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுத்தல் சம்பந்தமான கருத்துக்கள் முனெடுக்கப்பட்டது.

விழாவின் தொடக்க நிகழ்வாக கடல்சார் சூழல்பாதுகாப்பு உத்தியோகத்தர்- மன்னார் மாவட்ட கடல்சார்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை அவர்களினால் ஆரம்பிக்கபட்டது.

விழாவின் கௌரவ விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஸ்டான்லி டீமெல் அவர்கள் கலந்துகொண்டார்.

இவ்விழாவின் கருத்தரங்கு சார்பான பகுதிகள் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை உதவி முகாமையாளர் (operation) அமரநாயக உதவிமுகாமையாளர்(Ship)நிகில்
உதவிமுகாமையாளர் (province) Nilantha உதவி முகாமையாளர் (North&East)சிறிபதி அவர் களினால் முன்னெடுக்கப்பட்டது நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் உதவி பிரதேச செயலாளர் மன்னார், அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர், மன்னார் மத்திய சுற்றாடல் அதிகார சபை மன்னார் பிரதேச சபை செயலாளர்கள் மன்னார், மாந்தை, நானாட்டான், முசலி மன்னார் நகரசபை செயலாளர் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் வன வள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் கடல்தொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள் கரையோரம் பேணல் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர், தேசிய மீன்வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை மன்னர் காவல்துறை உத்தியோகத்தர்கள் கடற்படை உத்தியோகத்தர்கள், விமானபடை உத்தியோகத்தர்கள், சுகாதார உத்தியோகத்தர், கடலோர காவல்படைஉத்தியோகத்தர்கள் நிகழ்விற்கான அனுசரனை World food programme இனால் வழங்கப்பட்டது world food programme disater risk officer mr.janath hettiarcchi பங்கு பற்றியதுடன் சக ஊழியர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *