பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண முதலமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – ஹக்கீம் (விடியோ)

கடற்படை அதிகாரியை திட்டிய சம்பவம் தொடர்பில் தமது கட்சி உறுப்பினரும் கிழக்கு மாகாண
முதலமைச்சருமான நஷீர் அஹமட், நிபந்தனையின்றி மன்னிப்பு கோர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்ற நிழக்வொன்றில் கலந்து கொண்டுஉரையாற்றிய போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுனர் சிரித்துக்கொண்டே அடக்குமுறையை நடைமுறைப்படுத்துவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர்
குற்றம் சுமத்தியுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் நேற்று மட்டக்களப்பு, ஏறாவூரில் இடம்பெற்ற
நிகழ்வொன்றிலேயே இந்த கருத்தைவெளிப்படுத்தினார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்த சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை கிழக்குமாகாண ஆளுனர் கடைபிடித்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

தேசியங்களின் தடுமாற்றத்தில் தளம்பும் தீர்வுகள்!

wpengine

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகள் அனுமதி..!

wpengine

ஜனாதிபதி நிதியத்திற்கு 100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கிய IOC நிறுவனம்..!

Maash