பிரதான செய்திகள்

கிழக்கில் சாணக்கியனும் வடக்கில் சுமந்திரனும் பெரிய போராட்டங்களை செய்து படம் காட்டினார்கள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை  நீக்கப்போகின்றோம் என்று சொல்லி கிழக்கில் சாணக்கியனும் வடக்கில் சுமந்திரனும் பெரிய போராட்டங்களை செய்து படம் காட்டினார்கள். அதற்கு என்ன நடந்ததென தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிசாந்தன் கேள்வியெழுப்பினார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய இதனை தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்காக போராட்டங்களை நாங்கள் முன்னெடுக்கும் போது பெருமளவான மக்கள் இளைஞர்கள் வராமல் இருப்பதற்கு காரணம் பயங்கரவாத தடை சட்டமாகும். பயங்கரவாத தடைச்சட்டம் இல்லாமல் போனால் எமது சிறுவர்கள் கூட களத்தில் நிற்பார்கள்.

நல்லாட்சி காலத்தில் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக இருந்தார். அந்த காலத்தில் கூட பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க முடியாதவர்கள், அந்த அரசாங்கத்தை இரண்டு மூன்று தடவை முட்டு கொடுத்து தாங்கி இருந்தார்கள்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கப்போகின்றோம் என்று சொல்லி கிழக்கில் சாணக்கியனும் வடக்கில் சுமந்திரனும் பெரிய போராட்டங்களை செய்து படம் காட்டினார்கள். வடக்கு கிழக்கு மலையகம் என அவர்கள் பல இடங்களுக்கும் சென்று கையெழுத்தை சேகரித்தார்கள். 

பயங்கரவா தடை சட்டத்தை நீக்க யாரிடம் கோரிக்கை விடப் போகின்றோம் என்பது தொடர்பில் விளக்கமாக செய்யாமல் செயல்பட்டனர்.அதற்கு என்ன நடந்ததென தெரியவில்லை.
சர்வதேசத்துக்கு பேக்காட்ட முற்படுகின்றார்கள்.

சுமந்திரனும் சாணக்கியனும் மக்களை முட்டாளாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். படித்த சமூகத்திற்கும் புலம்பெயர் மக்களுக்கும் இது தெரியாமல் அல்ல.

புலம்பெயர்தேசத்திற்கு கடந்த காலங்களில் சென்ற அவருக்கு நடந்த அவமானங்களுக்கு பின்னர் இப்போது ராஜதந்திரத்தை பின்பற்றி தான் போகாமல் அவருடைய பிரதிநிதியாக சாணக்கியனை அனுப்புகின்றார். சாணக்கியன் தமிழ்த் தேசியத்தின் அடியில் இருந்து வந்தவர் அல்ல என்றும் தெரிவித்தார். 

Related posts

மின் கட்டண உயர்வால், ஒட்டுமொத்த மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்

wpengine

தாஜூடின் கொலை! அனுர சேனாநாயக்க, சுமித் பெரேரா பிணை முறுப்பு

wpengine

காஷ்மீர் பெண்களுக்கு பயிற்சி கொடுக்கும் நாமல்

wpengine