Breaking
Fri. May 17th, 2024
(ஊடகப்பிரிவு,கிழக்கின் மீள் எழுச்சி)

1934ல் ஜனவரி 31ல் பிறந்த மசூர் மௌலானா எல்லோராலும் அறியப்பட்ட ஓர் அரசியல் முதுசம் சிறுபான்மை சமூகமான தமிழ் முஸ்லிம் உரிமைப்போராட்டத்தின் ஆணி வேர் பல சத்தியாகிரக போராட்டங்கள் ஊடாக தனது அரசியல் கலாச்சாரத்தில் தான் பஞ்சோந்தி இல்லை என்பதை நிரூபித்தவர்.

தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக இருந்து அரசியல் செயற்ப்பாட்டுத்தளத்தில் தன்னை ஆழப்பதித்தவர் அவர் ஆங்கில உரையாடலின் உச்சம். தனது 35 வது வயதில் செனட் சபை உறுப்பினராகவும் இருந்தார். 1987ல் நடைபெற்ற வடகிழக்கு மாகாணசபையில் ஜ.தே.கட்சியின் ஒரே ஒரு உறுப்பினர் ஆவர். 1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பதாகவே மாமனிதர் மர்ஹீம் அஸ்ரஃப்பினால் முஸ்லிம் காங்கிரஸிற்கு அழைத்து வரப்பட்டார்.

மசூர் மௌலானாவை பாராளுமன்றம் அழைத்து செல்வது முஸ்லிம் காங்கிரஸின் கடமை என்பார் மாமனிதர் தலைவர் மர்ஹீம் அஸ்ரஃப் அப்போது 2000 தேர்தலில் மசூர் மெளலானாவை பாராளுமன்றத்திற்குகொண்டு முயற்சி மாமனிதர் தலைவர் மர்ஹீம் அஸ்ரஃப்பினால் தோல்வியில் முடிந்தது. காரணம் கட்சியின் மூத்ததுணைத்தலைவர் மருதுார்க்கணி மசூர் மெளலானாவை முதல் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற மாமனிதர் தலைவர் மர்ஹீம் அஸ்ரஃப்பின் நன்றிக்கடன் தீர்ப்புக்குள் மசூர் மெளலானா பின்தள்ளப்பட்டார்.

கட்சியின் போராளி மூத்ததுணைத்தலைவர் மருதுார்க்கணியின் அரசியல் அனுபவமும் பாராளுமன்ற கதிரையின் தகுதியும் மசூர் மௌலானாவை விட குறைந்து இருந்தாலும் கட்சிப்போராளிகள் வரிசைப்படி கௌரவப்படுத்தப்படாமல் நேற்று வந்தவர்கள் முன்னாள் அமைச்சர்கள் என்றாலும் வரிசைக்கே முதலிடம் கொடுத்தார் மாமனிதர் தலைவர் மர்ஹீம் அஸ்ரஃப்.

மாமனிதர் தலைவர் மர்ஹீம் அஸ்ரஃப் 1994 ம் ஆண்டு மசூர் மௌலானாவை அழைத்து வராவிட்டிருந்தால் 1999ம் ஆண்டு அஸ்ரஃப் என்ற ஆளுமையின் குரலை நிலை குலைய வைக்க ஜ.தே.கட்சி தலைவரால் தெரிவு செய்யப்பட்ட சேகு இஸ்ஸதீனீன் இடத்தை மசூர் மௌலானா சில வேளைகளில் நிரப்பியிருக்கக் கூடும்.

மாமனிதர் மர்ஹீம் அஸ்ரஃப்பின் வாக்குறுதிகளை நம்பிய மசூர் மெளலானா அந்தக்கட்சித்தலைமையையும் நம்பிக்கொண்டே காலம் கடத்தினார் ஆனால் 2015ம் ஆண்டு மரணிக்கும் வரை 15 வருடங்களாக ஏமாற்றப்பட்டார். நம்பிக்கை எனும் பேரில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையால் 2004 ம் ஆண்டு ஹீசையின் பைலா புஸ்பகுமார 2010ம் ஆண்டு தலைவரின் சகோதரர் டாக்டர் ஹபிஸ் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் போன்றோரிடம். மாதக்கணக்கில் நம்பிக்கை அடிப்படையில் கொடுக்கப்பட்ட எம்.பி பதவியை மசூர் மௌலானாவுக்கு ஒரு நாளாவது கொடுத்து முன்னாள் எம்.பி என்ற பெயரிலாவது அவரை மருதமுனை மண்ணில் அடக்கம் செய்திருக்கலாம்.

அதனை விட்டு விட்டு ஒவ்வொரு முறையும் சுக மில்லாத போது அவர் மனைவிக்கு தொலைபேசி எடுத்து ஒன்றும் யோசிக்கவேண்டாம் என்று சொல்லுங்கள் நான் எம்.பி கொடுக்கப்போகிறேன் அவருக்கு என்று சொன்னதைத் தவிர வேறு என்ன செய்தது. இவர் சொன்னார் என்று சொல்ல மசூர்மொளானா குடும்பமே மேடையேறும். அதனைக் கூட செய்யாத தலைமை உயிருக்கு உசாலாடிய மசூர் மெளலானாவைக் கூட நம்பிக்கை கொள்ளாத தலைமை எப்படி திடகாத்திரமுள்ள கிழக்கு அரசியல் தலைமைகளை நம்பிக்கை கொள்ளப்போகிறார்?
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *