கினிகத்தேனை பிரதேசத்தில் வாழும் மக்கள் மத்தியில் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்யும் வகையில், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் அழைப்பின் பேரில் வருகை தந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாத் பதியுதீன் தலைமையில், தெரிவு செய்யப்பட்ட மக்களிடம் விசேட கலந்துரையாடல் ஒன்று கினிகத்தேனை கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
அதன்பின்னர் தொழில்வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் அம்பகமுவ பிரதேசத்தில் அம்பகமுவ கல்பொதியாய பகுதியில் சிறிய ஆடைத் தொழிற்சாலை ஒன்று அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த ஆடைத்தொழிற்சாலையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் 12 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் 25 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, அமைச்சின் பல முக்கியஸ்தர்கள், அம்பகமுவ பிரதேச செயலாளர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.