செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்து குடும்பப்பெண் மரணம்.

காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்து குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகர் – களபூமியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சசிகலா (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் நேற்று (19) காலை கோவிலுக்கு செல்வதற்கு தயாராகிய போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அதனையடுத்து குறித்த பெண் காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முல்லைதீவில் கட்டுப்பணத்தைச் செலுத்தியது தமிழரசுக் கட்சி!

Maash

பேஸ்புக் குறித்து மார்க் சூக்கர்பேர்க் வெளியிட்ட தகவல்

wpengine

தேசிய பட்டியல் அட்டாளைச்சேனையினை ஏமாற்றும் ஹக்கீம்! பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine