(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பற்சிகிச்சைப் பிரிவுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் (13 அரை) பதின்மூன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய நவீன பற்சிகிச்சை கதிரை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீரிடம் விடுத்து வேண்டுகோளுக்கினங்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால்; வழங்கி வைக்கப்பட்ட மேற்படி பற்சிகிச்சை கதிரை உள்ளிட்ட உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு 20-04-2016 நேற்று புதன்கிழமை மாலை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதன் போது பதின்மூன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான இப் பற்சிகிச்சை கதிரை உள்ளிட்ட உபகரணங்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் ,காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பற்சிகிச்சைப் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் ஸீனா மிஸ்கீன் ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் சிறுவர் பிரிவுக்கான சிறுவர் வைத்திய நிபுனர் டாக்கடர் ஹஷித்த லியனாராச்சி ,முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் மர்சூக் அஹமட் லெவ்வை,காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு செயலாளர் டாக்டர் மாஹிர்,காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர்,செயலாளர் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள்,காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள்,தாதியர்கள்,ஊழியர்