பிரதான செய்திகள்

காணி கிடைக்கும் வரை முள்ளிக்குளம் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்-சுரேஸ் பிரேமச்சந்திரன்

மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் மக்களுக்கு பதில் கூறாமல் வருடக்கணக்கில் மக்களின் நில பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

முள்ளிக்குளம் கிராம மக்கள் மேற்கொண்டு வரும் காணி மீட்பு போராட்டம் ஆறாவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் முள்ளிக்குளம் பகுதிக்கு விஜயம் செய்து மக்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

மேலும் தெரிவிக்கையில்,

இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அதற்கு எங்களால் முடிந்த முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றோம்.

 

மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் மக்களுக்கு பதில் கூறாமல் வருடக்கணக்கில் மக்களின் நில பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது.

 

மக்களின் தொடர் போராட்டங்களின் மத்தியிலே கேப்பாப்புலவு பகுதியில் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றது. மக்கள் தமது நிலங்களை மீட்க போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

 

அந்த வகையிலே முள்ளிக்குளம் மக்கள் தமது காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

காணிகளை விடுவிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

 

இந்த நிலையில்,

தமது நிலம் மீட்கப்படும் வரை தமது உரிமைப் போராட்டம் தொடரும் எனவும் எங்களின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், உள்ளிட்டோர் பூரண ஒத்துழைப்பை வழங்கி எமது பூர்வீக நிலமான 7 தலைமுறைகளைக் கொண்ட முள்ளிக்குளம் பூர்விக கிராமத்தை மீட்டுத்தர அனைவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அல்-குர்ஆனை வைத்து பூஜை செய்த சக்தி தொலைக்காட்சி! பல கண்டனம்

wpengine

அமைச்சு பதவிகளை அப்படியே தருகிறோம்! விக்னேஸ்வரன் பக்கம் வாங்க

wpengine

முசம்மில் மீது மரிக்கார் குற்றச்சாட்டு! குப்பைகள் அகற்றவில்லை

wpengine