பிரதான செய்திகள்

கல்முனை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக உருவாக்கம் தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.


முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை சகல அதிகாரங்களும் கொண்டதாக உருவாக்குவதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம், இந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சுதந்திர தினத்தில்! காஷ்மீரில் கீழே விழுந்த தேசிய கொடி

wpengine

அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

wpengine

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் ஏலத்தில்..!

Maash