Breaking
Sat. Nov 23rd, 2024

எம்.ரீ. ஹைதர் அலி

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், நோய் நிவாரண கட்டளைச் சட்டத்தின் கீழ் நாடு பூராவும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றாடம் தமது வாழ்வாதாரமாக கூலித் தொழிலை நம்பி வாழ்க்கை நடாந்தும் ஏராளமான மக்கள் பாதிப்படைத்துள்ளனர்.

இந்நிலைமையைக் கருத்திற் கொண்டு கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபை தொழில் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்குவதற்கான நிதி சேகரிக்கும் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் அன்றாடத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபை ஏற்பாடு செய்துள்ள நிவாரணம் வழங்கும் நிதி சேகரிப்பு திட்டத்திற்கு சட்டத்தரணி ஹபீப் றிபான் அவர்களால் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சட்டத்தரணி ஹபீப் றிபான் கருத்து தெரிவிக்கையில், எமது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்கொல்லி நோயான கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலைமையினாலும் அன்றாடம் வாழ்வாதாரத்தை கூலித் தொழிலின் ஊடாக கொண்டு நடாத்தும் மக்களுக்கு ஓரளவு ஆறுதலை ஏற்படுத்தும் வகையிலும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வேண்டுகோளின் பேரில் எமது கல்குடா ஜம்மியதுல் உலமா சபை இந்நிவாரனப் பணிகளை ஆரம்பித்துள்ளதனை பாராட்டுகின்றேன்.

ஒரு நல்ல காரியத்தினை ஆரம்பித்து வைப்பவருக்கு அந்நற்காரியத்தினூடாக கிடைக்கின்ற நற்கூலியை எதிர்பார்த்தவனாக எனது பங்களிப்பினை இத்தால் செய்திருப்பதோடு ஏனைய செல்வந்தர்கள் மற்றும் பொதுநலன் விரும்பிகளையும் இந்நிவாரணப் பணிக்காக தங்களையும் இணைத்துக் கொண்டு பங்களிப்பினை வழங்கி அல்லாஹ்வுடைய நற்கூலியையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *