பிரதான செய்திகள்

கண்டி,திகன மக்களிடம் மூக்குடைந்த ஹக்கீம்

கண்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலவரத்தினைத் தொடர்ந்து அங்கு சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு தடுமாற்றம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறுவதாக அறிந்த நிலையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, அக்குறணை 4ஆம் கட்டை பள்ளிவாசலில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதில் பள்ளி நிர்வாகிகள், ஊர் மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு தற்போதைய பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்தனர்.

எனினும், இதன்போது பொதுமக்களால் எழுப்பப்பட்ட கேள்விகளின் மூலம் அமைச்சர் தடுமாற்றம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

என்னிடம் வடக்கு- தெற்கு என்ற பாகுபாடு அதிகாரப்பகிர்வை வழங்குவேன்

wpengine

22 வயதுடைய யுவதி துஸ்பிரயோகம் – 17 வயது மாணவன் கைது!

Editor

வவுனியா மாவட்ட மக்களுக்கான விஷேட அறிவித்தல்

wpengine