செய்திகள்பிரதான செய்திகள்

கட்டாயமாக்கப்பட்ட பேருந்து சாரதிகள் சீட் பெல்ட்..!

ஜூலை 1 ஆம் திகதி முதல் பேருந்து சாரதிகளின் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயமாக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சீட் பெல்ட்களை அணியாத சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் பி.ஏ.சந்திரபால தெரிவித்தார்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி, வாகன சாரதிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் 2011 ஒக்டோபர் 1 முதல் அமுலில் உள்ளது.

இந்தச் சட்டம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டிருந்தாலும், பல சாரதிகள் சீட் பெல்ட் அணியாததால் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த விடயத்தினை கருத்திற்கொண்டு, ஜூலை முதலாம் திகதி முதல் இந்தச் சட்டத்தை கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

முள்ளிவாய்க்கால் தமிழரின் அரசியல் பயணத்தை அடையாளப்படுத்தும் ஓர் எழுச்சி மிகு நாள்!! 

wpengine

வடபுல முஸ்லிம்களைப் பற்றி கவலைப்படாத வடமாகாண சபை எம்மை அரவணைத்துச் செல்கின்றதென்று எவ்வாறு கூற முடியும்? முசலியில் அமைச்சர் றிசாத் கேள்வி.

wpengine

பொதுச் சொத்துக்கள் திருடப்படுவதைப் பற்றி ஒரு சமூகமாக நாம் அஞ்ச வேண்டும்: ஜனாதிபதி.

Maash