பிரதான செய்திகள்

கடற்றொழில் அமைச்சரை சந்தித்த வாழைச்சேனை மீனவர்கள்

(அனா)
வாழைச்சேனை மீன் பிடித் துறைமுகத்தில் ஆழ்கடல் கடற்தொழில் அலகு திறப்பு விழாவும், மீனவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வும் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சரிடம் வாழைச்சேனை மற்றும் பாசிக்குடா மீனவர்கள் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான மீனவர் தங்குமிட கட்டடம் கல்குடாவில் நிர்மானிக்கப்படும் என்றும், மழை காலங்களில் முகத்துவாரக் கடலிலுள்ள கற்பாறையால் படகுகள் உடைந்து சேதமாகுவதாக கடற்றொழிலாளர்கள் முன்வைத்த கோறிக்கையை அடுத்து அக் கற்பாறையை அகற்றித் தருவதாகவும் கடல்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மீனவர்களிடம் வாக்குறுதி வழங்கினார்.

அமைச்சரினால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், தேவைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் மீனவர்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் மலசலகூட திட்டம் என்பன விரைவில் அமுல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது மானிய அடிப்படையில் ஒருவருக்கு இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆல் கடல் வலைகள் 12 பேருக்கும், கடல் பாதுகாப்பு கவச அங்கிகள் 13 பேருக்கும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தில் உதவிப் பணிப்பாளர் ஆர்.ருக்சன் குரூஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கடல்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மகிந்த அமரவீர கலந்து கொண்டதுடன் அதிதிகளாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள், வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், கடற்தொழில் அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

முசலி பிரதேச செயலாளர் தலைமையில் அரிசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்.

wpengine

பேராயரின் கருத்தினால் மகிழ்ச்சியடையும் முஸ்லிம்கள்!

Editor

பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் மஹிந்த விஷேட சந்திப்பு!

Editor