கட்டுரைகள்பிரதான செய்திகள்

ஐ.எஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலின் கைக்கூலிகலா ? அவர்களது எதிர்கால திட்டம் எவ்வாறு இருந்தது ? நிதி எங்கிருந்து வந்தது ?

முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது

ஐ.எஸ் இயக்கத்துக்கு உலக முஸ்லிம் மக்களிடம் காணப்படும் செல்வாக்கை வெறுப்பாக மாற்றுவதற்கும், அதனால் இளைஞ்சர்களை புதிதாக அவ்வியக்கத்தில் இணைவதனை தடுப்பதற்கும் மொசாட், CIA ஆகியோரால் திட்டமிட்டு பரப்பப்பட்டதுதான் ஐ.எஸ் இயக்கம் என்பது இஸ்ரேலின் கூலிப்படைகள் என்ற பிரச்சாரமாகும்.  

தங்களது கைக்கூலிகள் என்று தெரிந்தால் அவர்களை முஸ்லிம்கள் வெறுப்பார்கள் என்பதனாலேயே இஸ்ரேலின் மொசாட் அமைப்பு இந்த பிரச்சாரத்தினை முடுக்கிவிட்டு வெற்றி கண்டது. இதற்காக பல மில்லியன் டொலர் பணமும் ஒதுக்கீடு செய்தனர்.

பழம் நழுவி பாலில் விழுந்தது போன்று மொசாட்டின் இந்த ஊடக பிரச்சாரத்துக்கு வலுச்சேர்க்கும் விதமாகவே ஐ.எஸ் இயக்கத்தின் நடவடிக்கைகள் இருந்தது. அதாவது துரோகிகளுக்கு தண்டனை என்ற போர்வையில் பலரை கொடூரமான முறையில் கொலை செய்து அதனை அவர்களே ஒளிப்பதிவு செய்தும் வெளியிட்டனர். இது அவர்களது வெளிப்படைத் தன்மையை காட்டுகின்றது.

ஆனால் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் இராணுவத்தினர் உலகம் முழுவதிலும் பல இலட்சம் அப்பாவி மக்களை கொலை செய்ததுடன், அபுகிரைப், குவாண்டனமோ ஆகிய சிறைக்கூடங்களில் செய்த சித்திரவதைகளை மக்கள் கண்டிருக்கவில்லை. இது அவர்களது குள்ளத்தனத்தை பிரதிபலிக்கிறது.    

தனது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை ஏற்க வேண்டும். மறுத்தால் “ஜிஸ்யா” என்னும் வரியை செலுத்த வேண்டும் அதுவும் முடியாவிட்டால் தங்களது பிரதேசத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் ஐ.எஸ் இயக்கத்தினர் கட்டளை பிறப்பித்தனர்.

அவுலியாக்கள் என்ற போர்வையில் மரணித்தவர்களை இறைவனுக்கு நிகராக வணக்க வழிபாடுகள் நடாத்திய அடக்கஸ்தளங்கள் உள்ள பள்ளிவாசல்களை குண்டுவைத்து தகர்த்தார்கள். இது உலகம் முழுவதிலுமுள்ள தரீக்காவாதிகளுக்கு கோபத்தை உண்டுபன்னியதுடன், ஐ.எஸ் இயக்கம் ஒரு யூதர்களின் அமைப்பு என்று தரீக்காவாதிகளும் பிரச்சாரம் செய்தார்கள்.

எத்தனையோ தாக்குதலை நடாத்திய ஐ.எஸ் இயக்கத்தினர் ஒருபோதும் இஸ்ரேலை தாக்கவில்லை என்பதும் அவர்கள் இஸ்ரேலின் கைக்கூலிகள் என்று நியாயப்படுத்துவதற்கு எதுவாக இருந்தது.

ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பது பற்றி முன்னைய தொடரில் விரிவாக கூறியுள்ளேன். தரைப்படையை மட்டும் கொண்டுள்ள ஐ.எஸ் இயக்கத்திடம் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சென்று இஸ்ரேலை தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளோ, விமானப்படைகளோ இருக்கவில்லை.  

அத்துடன் பக்தாத் நகரை கைப்பேற்றுவதற்கு அறுபது கிலோமீட்டரையும் விட குறைந்த தூரமே இருந்த நிலையில், பக்தாதை கைப்பேற்றியதும் ஈராக் முழுமையாக விழுந்துவிடும். அதன்பின்பு அடுத்த கட்டமாக ஜோர்டானை கைப்பேற்றுவது ஐ.எஸ் யின் திட்டமாகும்.  

ஜோர்டானை இலகுவாக கைப்பேற்ற முடியும் என்றும் அதன் பின்பு ஜோர்டான் எல்லைவழியாக இஸ்ரேலை தாக்கி இலகுவாக வெற்றிபெற முடியும் என்பது ஐ.எஸ் இயக்கத்தின் எதிர்கால திட்டமாக இருந்தது.  

ஆனால் தொடர் வெற்றியின் மமதையினால், இரண்டாவது உலகமகா யுத்தத்தின்போது பரந்த நிலப்பரப்பைக்கொண்ட ரஷ்யாவுக்குள் ஊடுருவி ஜேர்மனிய படைகள் அகலக்கால் விதித்ததனாலேயே ஜேர்மன் தோல்வியடைந்தது என்ற வரலாற்றை கணிக்க ஐ.எஸ் இயக்கம் தவறிவிட்டது.

அதுபோல் ஈராக், சிரியா ஆகிய நாடுகளை உள்டக்கிய பெரும் நிலப்பரப்பில் அகலக்கால் விரித்திருந்ததனாலேயே இறுதியில் தோல்வியை தழுவினார்கள்.

அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஈராக் பிரதேசத்தில் அமெரிக்க படையினரும், சிரியா பிரதேசத்தில் ரஷ்ய படைகளும் தொடர்ச்சியாக பல நூறு தடவைகள் விமான தாக்குதலை நடாத்தினர்.  

உலகின் இரு வல்லரசுகளின் தொடர் விமான தாக்குதலுக்கு மத்தியில் ஈராக் படைகளும், சிரிய படைகளும் மற்றும் அவர்களுடன் சேர்ந்த வேறு இயக்கங்களும் இடைவிடாது தொடுத்த தரைவழித் தாக்குதலினால் ஐ.எஸ் இயக்கம் பின்னடைவை சந்தித்து நாளாந்தம் தனது கட்டுப்பாட்டு பிரதேசத்தை இழந்தது.

உலகின் பெரும் பணக்கார இயக்கம் என்று பெயர் பெற்ற இவர்கள், ஆரம்ப காலங்களில் கட்டார், சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகளின் கோடீஸ்வரர்கள் வழங்கிய நிதியின் மூலமும் பின்பு ஈராக், சிரியா போன்ற நாடுகளின் எண்ணை வயல்களை கைப்பேற்றி அதனை துருக்கி வழியாக விற்பனை செய்ததன் மூலம் பெரும் வருமானத்தை பெற்றார்கள்.

எதிரிகள் போன்று வெளியே காட்டிக்கொண்டாலும், ஐ.எஸ் இயக்கத்துக்கு உதவி வழங்கிய நாடுகளில் துருக்கி முதன்மையானது.  

இதற்கிடையில் ஐ.எஸ் இயக்க தலைவர் அவூபக்கர் அல்-பக்தாதி பற்றிய தகவல் தருபவர்களுக்கு (இலங்கை நாணயப்படி) 130 கோடி ரூபாய் பணம் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவிப்பு செய்திருந்தது. இவர் சியோனிசத்தின் கைக்கூலி என்றால் ஏன் அமெரிக்கா இந்த அறிவிப்பை செய்ய வேண்டும் என்று நாங்கள் சிந்திக்க தவறிவிட்டோம்.

இறுதியில் 26.10.2019 சனிக்கிழமை நள்ளிரவு சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் பாரிஸா என்னும் கிராமத்தில் அபூபக்கர் அல்- பக்தாதி தங்கியிருந்த வீட்டின்மீது எட்டு ஹெலிக்கொப்டர்களில் சென்ற அமெரிக்கா படையினர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர்.

அபூபக்கர் அல்-பக்தாதி அவர்கள் அமெரிக்க படையினர்களுடன் இறுதிவரைக்கும் தாக்குதல் நடாத்திவிட்டு இறுதியில் தனது மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை அங்கியை வெடிக்கவைத்து அமெரிக்க படைகளிடம் சிக்காது தற்கொலை செய்துகொண்டார்.

தொடரும்…………………………..

Related posts

முகநூல் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. 

wpengine

கட்டார் பொருளாதார அமைச்சரை சந்தித்த அமைச்சர் றிஷாட்

wpengine

ஹமாஸ் போராளிகள் மீது வான் தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேல்

wpengine