உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

எலான் மஸ்கின் (Elon Musk) ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் (SpaceX’s Starship) விண்கலம் வெடித்து சிதறியது .

எலான் மஸ்கின் (Elon Musk) ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் (SpaceX’s Starship) விண்கலம் சோதனைக்காக விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விண்கலம் சோதனையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேரலையில் ஒளிபரப்பியது.

நேரலை காட்சிகளின் படி ஸ்டார்ஷிப் (Starship) விண்கலத்தின் இயந்திரங்கள் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் செயலிழந்தன.

இதையடுத்து தெற்கு ஃபுளோரிடா மற்றும் பஹாமஸ் அருகில் உள்ள வான்பகுதியில் விண்கலம் வெடித்து சிதறியுள்ளதாகவும் இதனால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக , ஃபுளோரிடா பகுதியில் சில விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பேஸ்புக் பதிவேற்றம் இளம்பெண் தற்கொலை! பெண்களே!

wpengine

நேரடி: ஊழலுக்கு எதிரான மாநாட்டில் இன்று உரையாற்றும் ஜனாதிபதி

wpengine

லண்டனில் ஒரு ‘ஹிஜாப் அணிந்த கிக் பாக்ஸர்’

wpengine