இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் பதவி விலகிய நிலையில் துணைப் பொதுச்செயலாளரான எம்.கே.சுமந்திரன் பதில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது உயிரிழந்த தமிழரதசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பதில் தலைவர் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.