உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

உறவை புதுபிக்க ரஷ்யாவிடம் மன்னிப்பு கோர உள்ள தையிப் அர்துகான்

ரஷ்யாவுடனான பதற்ற சூழலை சரிசெய்யும் முயற்சியாக துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் அர்துகான் நேற்று ரஷ்யாவுக்கு பயணமானார். அங்கு அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

கடந்த மாதம் துருக்கியில் இராணுவ சதிப்புரட்சி முறியடிக்கப்பட்ட பின்னர் எர்துவான் வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பமாக இது அமைந்தது.

சிரிய எல்லையில் வைத்து கடந்த ஆண்டு ரஷ்ய இராணுவ ஜெட் விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்தே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

ரஷ்யா புறப்படுவதற்கு முன்னர் புடினை தனது ‘நண்பர்’ என்று குறிப்பிட்ட எர்துவான், ரஷ்யாவுடனான உறவில் புதிய பக்கம் புரட்டப்படும் என்று உறுதி அளித்தார்.

போர் விமானத்தை சுட்டுவீழ்த்தியதற்கு அர்துகான் ரஷ்யாவிடம் மன்னிப்புக் கேட்டதை அடுத்தே இரு நாட்டு உறவும் வழமை நிலைக்கு திரும்பியது.

ரஷ்யா சென்றிருக்கும் எர்துவான் இரு நாட்டு வர்த்தக, முதலீடு மற்றும் சுற்றுலா துறைகளை புதுப்பிப்பது மற்றும் சிரிய பிரச்சினை குறித்து ஒருமித்த நிலைப்பாட்டை பெறுவதற்கு முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் விளையாட்டு பிரச்சினை! வன்னிக்கு விளையாட்டு மைதானம் விரைவில் நாமல்

wpengine

இரா.சம்பந்தனுக்கு எதிரான விசாரணை

wpengine

மன்னார் மாவட்டத்தில் வீதி யோரங்களில் சிலைகள் அமைக்க முடியாது.

wpengine