பிரதான செய்திகள்

உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர்

உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் இதனை கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

எனினும், இதனை உறுதிப்படுத்த முடியாத  நிலையில் ஆய்வு கூட  பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அறிக்கை கிடைத்தபின்னரே அதனை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்த விடயம் பாரிய பிரச்சினை கிடையாது என அவர் தெரிவித்துள்ளதுடன், புதிய வைரஸ் தொற்றுக்குள்ளானதாக கருதப்படும் நபர் கடுமையான தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சீனாவின் உரம் இலங்கைக்கு மரண அடியாக மாறும்-கலாநிதி தயான் ஜயதிலக

wpengine

வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் திலீபனின் அரசியல் அடாவடித்தனம்! வவுனியா மக்கள் விசனம்

wpengine

மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற தேசிய விளையாட்டு தின நிகழ்வு!

wpengine