Breaking
Mon. Nov 25th, 2024
(எம்.ரீ. ஹைதர் அலி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் மீராவோடை கிராமத்தில் அமைந்துள்ள உபதபாலகமானது 1956ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். இதற்கொரு தனிமையான கட்டிடம் இன்மையால் பல சிரமத்தின் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீர் வழங்கல் நகர அபிவிருத்தி திட்டமிடல் அமைச்சருமான கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்கள் தபால்த்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் 85 இலட்சம் ரூபா நிதியொதிக்கீடு மேற்கொள்ளப்பட்டு இதற்கொரு தனியானதொரு கட்டடம் 2011.11.11ஆந்திகதி  அமைச்சரினால் திறந்தும் வைக்கப்பட்டது.

1956ஆம்ஆண்டு தொடக்கம் இன்றுவரை உபதபாலகமாகவே இது காணப்படுவதோடு,  இவ்உபதபாலகத்தின் செயற்பாடுகள் அதன் அருகாமையிலுள்ள கிராமங்களை உள்ளடக்கியதாக கிட்டத்தட்ட 9000 பொதுமக்கள் இதனால் நன்மை அடைந்து வருகின்றனர். 85 இலட்சம் பெறுமதியான தபாலகத்திற்கான கட்டடம் இருந்தும் இதனை உபதபாலகத்திலிருந்து தபாலகமாக மாற்றுவதற்கு யாரும் முன்னெடுப்புக்களை மேற்கொள்ளாத நிலையில் மக்களின் நன்மைகருதி பொது விடயங்களில் மிகவும் கரிசனை கொண்டு செயற்பட்டு வரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் மீராவோடை  உபதபாலதிபர் எஸ்.ஏ. ஹமீட் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக 2016.09.06ஆந்திகதி (செவ்வாய்க்கிழமை) இதனை பார்வையிடுவதற்காக விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது முன்னாள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளரும், மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபையின் தலைவருமான கே.பீ.எஸ். ஹமீட் மற்றும் உபதபாலதிபர் எஸ்.ஏ. ஹமீட் ஆகியோரினால் இவ்உபதபாலகத்தின் செயற்பாடுகள் மற்றும் இதனால் பொதுமக்கள் அடையும் நன்மைகள் என்பன சுட்டடிக்காட்டப்பட்டதோடு பொதுமக்களின் நலன்கருதி இவ்உபதபாலகத்தை தபாலகமாக தரமுயர்த்தி தருமாறு மாகாண சபை உறுப்பினரிடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்தனர். இதனை கருத்திற்கொண்ட மாகாண சபை உறுப்பினர் அதற்குரிய முன்னெடுப்புக்களை தான் முன்கூட்டியே மேற்கொண்டுள்ளதாகவும் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ்வின் உதவியுடன் மிக விரைவில் தபாலகமாக தரமுயர்த்தப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொண்டார்.
அத்தோடு, தபாலகத்தின் வரவேற்பு பகுதிக்கு மேலுள்ள கூரைத்தகடு முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதனாலும், இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தபாலக கட்டடப்பகுதிகளுக்குள் உட்செல்வதாகவும், பறவைகளின் எச்சங்களினால் முன்பகுதி அசுத்தமாக்கப்படுவதாகவும் இக்கூரையினை முற்றுமுழுதாக பொதுமக்கள் நலன்கருதி திருத்தி தருமாறு தபாலதிபர் எஸ்.ஏ. ஹமீட் மாகாண சபை உறுப்பினரிடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்தார்.unnamed-5
இதனை கருத்திற்கொண்ட மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தனது சொந்த நிதியிலிருந்து இக்கூரையினை முற்றுமுழுதாக திருத்தியமைப்பதற்குரிய மொத்த செலவீனத்துக்குரிய காசோலையினை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளரான எம்.ரீ. ஹைதர் அலி அவர்களும் கலந்துகொண்டார். unnamed-4
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *