பிரதான செய்திகள்

உணவுக்காக மாத்திரம் 120 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் வருடம் ஒன்றிற்கு உணவுக்காக மாத்திரம் 120 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உணவு மற்றும் குடிபானங்களுக்காக இவ்வாறு 120 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக நாடாளுமன்றின் நிதி அதிகாரிகள் குழுவினர் மதிப்பீடு செய்துள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் வருடம் ஒன்றிற்கு மின்சாரத்துக்காக 80 மில்லியன் ரூபாவும், தொலைபேசி பாவனைகளுக்கு 14.5 மில்லின் ரூபாவும், குடிநீருக்காக 9 மில்லியன் ரூபாவும் செலவிடப்படுவதாக நாடாளுமன்ற நிதி பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் விருந்தினர்கள் உணவு மற்றும் பானங்களை உட்கொள்கின்றனர், இதில் 75 சதவீத உணவுச் செலவு நாடாளுமன்ற ஊழியர்களுக்கான செலவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உணவுகள் வீண் விரயமாவதை தடுப்பதற்காக நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலை ஊழியர்கள் உணவு வகைகள் தயாரிப்பதை கணிசமாக குறைக்க வேண்டும் எனவும் அங்கு வருகைத் தருபவர்களின் விபரங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் அதற்கேற்றால் போல் உணவு தயாரிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், மின்சார செலவுகளில் பெரும்பகுதி குளிரூட்டிக்காக (air-conditioning system) செலவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வடக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் நிலையான கடற்றொழில் அபிவிருத்தி

wpengine

சமூகவலைத்தளத்தில் அரச உத்தியோகத்தர்களை விமர்சிக்க தடை

wpengine

கழிவறையுடன் சிங்கப்பூர் சென்ற வட கொரிய அதிபர்

wpengine