Breaking
Tue. May 14th, 2024

சென்று வாருங்கள், இறைவன் உதவியால் மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி வாருங்கள். ஒரு நல்ல மனிதன் என்ற வகையில் உங்களுக்கு எனது பிராத்தனைகள். உங்களுக்கு மக்களால் வழங்கப்பட்ட அரசியல் அதிகாரத்தினூடாக இன, மத பேதமின்றி உங்களின் சிறந்த பண்பினைக் கொண்டு மக்களுக்கு உங்களின் சக்திக்கு மேற்பட்டு பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளை ஆற்றியுள்ளீர்கள் அதுமாத்திரமின்றி எமது சமூகம் சார்ந்த உரிமைகளுக்காகவும் முதலில் குரல் கொடுப்பவனும் நீங்களே.

அரசியலை தனது தொழிலாக நினைத்து செயற்படும் அரசியல்வாதிகளில் நீங்களோ ஒரு விசித்திரமானவர். அரசியல்வாதிகள் என்பவர்கள் மக்களின் சேவகர்கள் என்பதனை மற்றைய அரசியல்வாதிகள் உங்களைப் பார்த்து உணர்ந்து கொள்ளும் வகையிலும் மக்களின் பணம் மக்களைத்தான் சென்றடைய வேண்டும் என்பதற்காக சிந்திக்கும் வள்ளல் நீங்கள். கட்சி வேறுபாடு பார்த்து சேவை செய்பவனும் நீங்களல்ல.

எமது மாவட்டத்தினை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தாலும் ஏனைய மாவட்டங்களில் வசிப்பவர்கள் உங்களின் பண்பினையும், சேவையினையும் கண்டு உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இதனை நான் நன்றாக அறிவேன் ஏனென்றால் நான் உங்களின் ஊடக இணைப்பாளராக கடமையாற்றி வருபவன் என்ற வகையில் உங்களைப்பற்றி என்னிடம் தொலைபேசியிலும், நேரிலும் என்னிடம் பேசுவதை வைத்து நான் புரிந்து கொண்டேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களுக்கு பின் நான் சந்தித்த அரசியல்வாதிகளில் உங்களைப் போன்றொரு சிறந்த, பண்பான அரசியல்வாதிகளை நான் இன்றுவரை கண்டதில்லை. நான் நேசிக்கும் அரசியல் தலைமை என்றால் அது நீங்கள் மாத்திரம்தான்.

உங்களை பிறர் முகநூலில் விமர்சனம் செய்யும்போது அவர்களை நீங்கள் விமர்சிக்காதீர்கள் அல்லாஹ் போதுமானவன் என்று என்னை தடை செய்யும் பண்புக்குரியவன் நீஞ்கள். சில தினங்களுக்கு முன்னர்தான் என்னிடம் ஒரு விடயத்தினை கூறினீர்கள் நான் உங்களை என் உடன்பிறவா சகோதரனாக பார்க்கின்றேன் என்று அதனை கேட்டதும் என் கண்கள் என்னை அறியாமல் கண்ணீர் சிந்திவிட்டது.

உங்களின் சொந்த நிதிகளில் மற்றவர்கள் அறிந்தும் அறியாமலும் இன, மத பேதமின்றி சேவைகள் செய்து வருபவன் நீங்கள். இத்தருனங்களில் என் மனதில் தோன்றுவது தர்மம் செய்பவர்களின் செல்வங்கள் குறைவதில்லை என்ற என்னமே.

நீங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் நான் கண்டுகொன்ட மற்றுமொரு விடயம் நீங்கள் அதிகமதிகம் உச்சரித்து சொல்லும் வார்த்தை ஆட்சி அதிகாரங்களை வழங்குபவனும் அல்லாஹ் அதனை பிடிங்கி எடுப்பவனும் அல்லாஹ் ஒருவன் மாத்திரம் என்ற குர்ஆன் வசனமாகும். அந்த நம்பிக்கையில் உங்களின் அரசியலை செய்து கொண்டிருப்பவர் நீங்கள்.

உங்களின் ஊடக இணைப்பாளராக நான் கடமையாற்றி வருவதற்காக என்னை நீங்கள் கௌரவித்து உங்களிடமிருந்து விடைபெற வைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ எனக்கு தெரியவில்லை. ஆனால் உங்களை கௌரவிக்கும் மனம் எனக்கு இப்போது கிடையாது அதற்கு எனக்கு இன்னும் பல காலங்கள் இருக்கின்றன. இன்ஷாஅல்லாஹ்.

உங்களின் ஊடக இணைப்பாளனாக நான் கடமையாற்ற ஆரம்பித்த காலம் தொட்டு இன்றுவரை நான் உங்களினால் முடியுமான சேவைகளையும், அரச மற்றும் சொந்த நிதிகளிலும் உங்களிடமிருந்து கல்குடாப் பிரதேசத்திற்கு என்னால் முடியுமான அளவிற்கு பெற்றுக் கொடுத்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.

உங்களுக்கு மக்களால் வழங்கப்பட்ட அரசியல் அதிகாரத்திலிருந்து நீங்கள் இன்றுடன் விடைபெறலாம் ஆனால் நான் உங்களிடமிருந்து விடைபெற விரும்பவில்லை எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா ஷிபா பௌண்டேஷனின் ஊடாக பெற்றுக்கொடுக்கக் கூடிய சமூகப் பணிகளையும் அதன் ஊடகத்திலும் நான் கடமையாற்றுவேன் என உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

மீண்டும் கூறுகின்றேன் சென்று வாருங்கள், இறைவன் உதவியால் மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி வாருங்கள். ஒரு நல்ல மனிதன் என்ற வகையில் உங்களுக்கு எனது பிராத்தனைகள். அல்ஹம்துலில்லாஹ்
எம்.ரீ. ஹைதர் அலி
ஊடக இணைப்பாளர்
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *