புனித ஹஜ்ஜுப்பெருநாள் எதிர்வரும் 2ஆம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1438 புனித துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு நேற்று மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா,கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டின் எப்பிரதேசத்திலும் துல் ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டதாக ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்காதமையால் புனித துல் கஹ்தா மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து நாளை 24ஆம் திகதி துல் ஹஜ் மாதத்தின் முதலாம் நாள் ஆரம்பிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் துல் ஹஜ் மாதத்தின் 10ஆம் நாளான எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி சனிக்கிழமை புனித ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாடப்படும் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.