(ஆ.ஹசன்)
ஹொங்கொங் நாட்டின் பிரபல Haier மற்றும் Inspur நிறுவனங் கள் இலங்கையில் தொழில்நுட்ப முதலீடுகளை மேற்கொள்வது குறித்து புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வு டன் இன்று திங்கட்கிழமை கலந்துரையாடலில் ஈடுபட்டன.
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் Haier நிறுவனத்தின் பணிப்பாளர் பிரான்க் ஹுவாங், Inspur நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர்களான ஜெஸீகா சன், பிரான்ங் மீன்ங், மட்டக்களப்பு பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் நிப்ராஸ் மொஹமட் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேவேளை, ரிதிதென்னையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு பல்கலைகழகத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் தொழில்நுட்ப வாசிகசாலை என்பன நிர்மாணிப்பது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன், இக்குழு நாளை செவ்வாய்க்கிழமை பல்கலைகழக வளாகத்துக்கு விஜயம் செய்யவும் தீர்மானித்தது.