உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கையர் 12 பேர் காயம்! சவுதி அரேபியாவின் விமானநிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல்

சவுதி அரேபியாவின் விமானநிலையம் மீது இடம்பெற்ற ஆளில்லா விமானதாக்குதலில் இலங்கையர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யேமனின் ஈரானுடன் இணைந்த ஹெளதி குழுவை எதிர்த்துப் போராடும் சவுதி தலைமையிலான கூட்டணி இதனை தெரிவித்துள்ளது.

யேமன் சவுதிஅரேபியா எல்லையிலுள்ள விமான நிலையமொன்றை இலக்கு வைத்து ஹெளதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலின் போதே இவர்கள் காயமடைந்துள்ளனர்.

இரண்டு சவுதி பிரஜைகள் மற்றும் பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியப் படையினர் வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை வானிலேயே வெடிக்க வைத்தனர். அதன் சிதறல்கள் காரணமாக இலங்கையர்கள் உட்பட 12 பேர்காயமடைந்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்களிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகக்காக பயன்படுத்தப்பட்ட விமானநிலையத்தை இலக்குவைத்ததாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

உதாகம்மான ”எழுச்சி – அரச ஊழியா்கள் வீடமைப்புக் கிராமம்” – சஜித் பிரேமதாச

wpengine

மியன்மாருக்குப் சிறப்பு விமானத்தில் புறப்பட்ட இலங்கை நிவாரண குழு..!

Maash

பசிலுக்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோமாளியாக வேண்டாம்.

wpengine