வருமானம் பெறும் வழியாக மாற்றப்பட்டுள்ள அரசியலை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும் என்பதே தனது ஒரே நோக்கம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டை நீண்டகாலம் கட்டியெழுப்ப வேண்டுமாயின் நாம் பல பணிகளை செய்ய வேண்டும். பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். கடந்த 70 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த இரண்டு கட்சிகளால் நாட்டை முன்னேற்ற முடியாது என்பது ஒப்புவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எந்த விவாதங்களும் தேவையில்லை. கடந்த காலம் முழுவதும் இதனை இந்த கட்சிகள் ஒப்புவித்துள்ளன. தொடர்ந்தும் இந்த பிரதான கட்சிகள் பற்றி பேசி பயனில்லை.
மகிந்த, மைத்திரி, ரணில், பசில், ரவி இவர்கள் எவரை பற்றி பேசியும் பிரயோசனமில்லை. நாங்களும் பேசி பேசி ஓய்ந்து போயுள்ளோம் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.