பிரதான செய்திகள்

இம்போட்மிரர் செய்தி ஆசிரியரைத் தாக்கியவர் மன்னிப்புக்கோரி கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.

க்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் எஸ்.எல்.முனாஸ் இம்போட்மிரர் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேரடியாகச் சென்று செய்த முறைப்பாட்டை அடுத்து நிலையப் பொறுப்பதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.

இளம் ஊடகவியலாளரும் இம்போட்மிரரின் செய்தி ஆசிரியர்களில் ஒருவருமான பஷீர் சப்னி அகமட் நேற்று முந்தினம் இரவு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தமீம் ஆப்தீன் என்பவரால் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் காரியாலயத்தில் வைத்து தாக்கப்பட்டார்.

குறித்த பிரச்சனை தொடர்பில் நேரடியாக விசாரணை மேற்கொண்ட அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் குமார ஊடகவியலாளரைத் தாக்கிய நபரை உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து தக்கப்பட்ட ஊடகவியலாளரின் அனுமதியுடன் அந்த இடத்திலேயே தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக்கோரியதன் பின்னர் இதன் பிறகு ஊடகயலாளர்களைத் தக்குதல் அச்சுறுத்தல் போன்றவை செய்யக்கூடாது என்று கடுமையாக எச்சரித்து சமாதானப்படுத்தி முறைப்பாட்டை பதிவு செய்து அனுப்பிவைத்தார்.

குறித்த நபரால் தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் சப்னி அஹமட் குறிப்பிடுகையில் எந்த குற்றமும் செய்யாத நிலையில் மற்றவர்களின் சேவைகளைப் பற்றி தன்னால் பதிவிடப்படும் கருத்துக்களில் வெறுப்படைந்ததன் காரணமாகவே இவர் என்னைத்தாக்கினார்.

 ஆனால் இன்றைய அரசியலில் சிறந்த இளைஞர்கள் முன்வரவேண்டும் மீண்டும் மீண்டும் அடிபுடி சண்டை போன்ற காடைத்தனமான அரசியல் கலாச்சாரத்தை ஒருபோதும் இளைஞர்கள் ஆதரிக்கக் கூடாது.

அரசியல் நாகரிகம் தெரியாத சரியான முறையில் அரசியலை அறிந்திடாதவர்கள் எல்லாம் அரசியலுக்குள் நுளைந்ததன் பின்னர்தான் அரசியல் சாக்கடை என்ற குப்பைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.

ஆனால் நாளைய தலைவர்களை உருவாக்க வேண்டிய அரசியல்வாதிகள் நாளைய இளைஞர்களை வழிகெடுக்கும் நபர்களை வளர்த்தால் எதிர்வரும் இளைஞர் சமுதாயம் கேடுகெட்டு விடுவார்கள் எனவே எந்தக்கட்சியாக இருந்தாலும் நல்லவர்கள் சமூகத்து நல்ல சேவைகள் செய்யக்கூடியவர்கள் நாளைய தலைவர்களான இளைஞர்களை வழி நடாத்தக்கூடியவர்களை அரசியல்வாதிகளாக தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர அடியாட்களையும் காடையர்களையும் உருவாக்கும் அரைசியல் வாதிகளை தெரிவு செய்து மீண்டும் சமூக சீரளிவுக்கு இடமளிக்க கூடாது என்று தெரிவித்த இளம் ஊடகவியலாளர் சப்னி அஹமட் அப்படியான அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related posts

கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புக்கள் இன்றுடன் நிறைவு.

wpengine

ஓட்டமாவடியில் அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

wpengine

வர்த்தகமானி அறிவித்தல் வெளிவந்தால் 19ஆம் திகதி தேர்தல் மஹிந்த

wpengine