செய்திகள்பிரதான செய்திகள்

இன்று ஏட்பட்ட வாகனவிபத்தில் இளைஞன் பலி.!

பண்டாரகம, கம்மன்பில குளத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று(16) அதிகாலை நடந்த இந்த விபத்தில் உயிரிழந்தவர் பண்டாரகம, அந்துன்வென்ன பகுதியைச் சேர்ந்த 26 வயதான கடற்படை உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் காருக்கும், உயர் மின்னழுத்த தூணுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து, பண்டாரகமவில் பல பகுதிகளுக்கு மின்சாரம் தடைப்பட்டதுடன், மின்சார சபை ஊழியர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் அதை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

உயிரிழந்த இளைஞன் பண்டாரகம, வேவிட்ட பகுதியில் உள்ள தனது காதலியின் வீட்டில் இருந்து வீடு திரும்பும் போது இந்த விபத்தை சந்தித்துள்ளார்.

அவர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி, ஒரு மின்சார தூணுடன் மோதி, சுமார் 15 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.

அந்த நேரத்தில், வீதியில் பயணித்த பல வாகனங்களின் சாரதிகள் விபத்து நடப்பதைக் கண்டு, பிரதேசவாசிகளுக்கு தகவல் தெரிவித்து, காரில் சிக்கிய இளைஞனை மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் 56 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீடு திரும்பியிருந்த நிலையில், நாளை (17) தனது வேலைக்கு அமைவான தனியார் பல்கலைக்கழகத்தில் இறுதி பரீட்சை ஒன்றை எழுத திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்

Related posts

ஒலுவில் துறைமுகத்தை மூடி­விட தீர்மானம்! இத்­து­றை­முகம் ஒரு வெள்ளை யானை-மஹிந்த அம­ர­வீர

wpengine

பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கும் அமைச்சு பதவிகள் வேண்டும்!-சாகர காரியவசம்-

Editor

சதொச மோசடி கணனிமயப்படுத்தாமையே! காரணம் அமைச்சர் றிஷாட் (விடியோ)

wpengine