Breaking
Fri. May 17th, 2024

(சப்னி அஹமட்)

னவாதாங்களை தூண்டும் செயல்கள் முஸ்லிம் மக்கள் உள்ளபிரதேசங்களில் இடம்பெற்றாலும் மக்கள் எப்போதும் வழிப்புணர்வுகளுடன் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு முஸ்லிம், தமிழ், சிங்கள வேறுபாடுகள் இல்லாமல் நாம் ஒற்றுமையுடன் நல்ல மனப்பாங்குடன் இருக்க வேண்டும். அது போல் இலங்கை இனவாதம் அற்ற சூழலை உருவாக்க நாம் அனைவரும் முன்வரவதுடன் அதெற்கேற்றாப்போல் நமது ஒற்றுமையுடனான மனப்பாங்கினை உருவாக்க வேண்டும்  என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

கம்பஹா ,மினுவான்கொட அல்-கமர் பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், கலை நிகழ்வும் கடந்த (24) மினுவான்னொட கல்லெலுவ அல்-அமான் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்.

நாம் ஒற்றுமையுடன் நல்லதொரு பிரதேசங்கள் இருக்கின்றோம் குறிப்பாக இவ்வாறான கல்லுவ போன்ற பிரதேசங்கங்களில் மூன்று மக்களும் சூழ்ந்து ஒற்றுமையாக வாழ்கின்றோம் அவ்வாறாக வாழ்கின்ற நாம் எமக்கெதிராக சில இனவாத செயற்பாடுகள் இடம்பெறுகின்றது ஆகவே அதையெல்லாம் இவ் காலகட்டத்தில் சிறந்து முறையிலும், நல்லதொரு திட்டங்கள் ஊடகாவும் கையாளவேண்டும்.

குறிப்பாக இவ் நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்டது இவ்வாரான இனவாத செயற்பாடுகளில் இருந்து தவிர்ந்து நல்லதொரு சமூதாயத்தையும், இனவாதம் அற்ற சூழலையும், நல்லதொரு பொருளாதார சூழலலையும் உருவாக்குவதே அத்தகையே செயற்பாட்டினையே எமது நல்லாட்சி மேற்கொண்டுவருகின்றது. ஆனால் சில இனவாதங்களை தூண்டும் சில செயற்பாடுகள் இடம்பெறுகின்றது. அதற்கான தீர்வுகளையும் எமது நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும், தலைவர் ரவூப் ஹக்கீமும் இணைந்து பல திட்டங்களை மேற்கொண்டு அவ்வாறான இனப்பிரச்சினைகளை தீர்த்துவருகின்றனர்.

முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் ஒரு சில இனவாத செயற்பாடுகளை மேற்கொள்ள இனவாதிகளினால் முயற்சி செய்கின்றனர், ஆகவே அதற்கேற்றாற்ப்போல் நமது செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். அது போல் கம்பஹா மாவட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மிகவும் 250அளவிலான கொடுப்பணவுகள் மாத்திரமே வழங்கப்படுவதினால் ஆசிரியர்கள் பெரும் கஸ்டங்களுக்கு மத்தியில் செயற்படுகின்ரனர். ஆகவே அதற்கான கடிதத்தினை இவ்மாகாண சபை முதலமைச்சருக்கும் அனுப்பவுள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார். 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *