பிரதான செய்திகள்

இணையத்தின் ஊடாக 17 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் நிதி மோசடி

இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பண பரிவர்த்தனையின் போது சுமார் 17 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் நிதி மோசடி செய்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று களனி குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாடொன்றிற்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக குறித்த குழு கைது செய்யப்பட்டுள்ளது.

பரிசுத் தொகை கிடைத்துள்ளதாக தெரிவித்து குறித்த தொகையினை வைப்பிலிடுமாறு கூறி குறித்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

களனி குற்றவியல் விசாரணை பிரிவினரால் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின போது பல்வேறு சிம் அட்டைகளை பயன்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றில் மேற்கொள்ளப்படும் குறித்த நிதி மோசடி தொடர்பில் தெரியவந்துள்ளது.

அதன்படி, நைஜீரியா நாட்டை சேர்ந்த 4 ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த தம்பதியினர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி – சுப்ரமணியன் சுவாமி

wpengine

கட்சியொன்றினை சேர்ந்தவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், கிராமத்தின் அபிவிருத்தியை செயற்படுத்த முடியவில்லை

wpengine

கட்டாய உயர் பீடக் கூட்டத்தில் செயலாளர் மாற்றத்தின் போது நடந்தது என்ன?

wpengine