உலகச் செய்திகள்பிரதான செய்திகள்விளையாட்டு

ஆஸ்திரேலிய பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஊதிய உயர்வு

இந்தியாவில் சமீபத்தில் நடந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது.

அப்போட்டியில் ஆஸி மகளிர் அணியினர் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.

இறுதி ஆட்டத்தில் அவர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வியடைந்தனர்.

எனினும் இறுதி ஆட்டம்வரை வந்து சிறப்பாக ஆடிய இந்த வீராங்கனைகளுக்கு 76,000 அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான ஊதியம் கிடைக்கவுள்ளது.

இது ஆஸ்திரேலியாவிலுள்ள மற்றைய மகளிர் அணிக்கு கிடைக்கும் ஊதியத்தைவிட அதிகம்.

இந்த முன்னெடுப்பை டிவிட்டர் மூலம் வரவேற்றுள்ள பிரதமர் மால்கம் டர்ண்புல், மகளிர் அதிகாரம் வலுவூட்டப்பட்டால், அதன் மூலம் முழு பொருளாதாரமும், சமூகமும் பலனடையும் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியா நகரப்பகுதிக்குள் யானை: உடைமைகள் சேதம்!!!

Maash

2019ஆம் ஆண்டுக்கான மீள்குடியேற்ற செயலணியின் வேலைத்திட்டம் வவுனியாவில்

wpengine

‘ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னாலுள்ள சக்திகளை வெளிக்கொணர வேண்டுமென்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பாகும்’

Editor