Breaking
Sun. Apr 28th, 2024

(ஊடகபிரிவு)

கொஸ்கம சாலாவ இராணுவ முகாம் ஆயுதக்களஞ்சியசாலையில்  ஏற்பட்ட தீ விபத்தினால் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி விகாரையிலும் வேறு பகுதிகளிலும் தங்கியிருந்த மக்களை நேற்று  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான்  நேரில் சென்று பார்வையிட்டார்.

குறித்த விபத்தினால் பாதிக்கப்பட்ட பூகொட குமாரிமுல்ல பகுதிக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

அத்துடன்  குமாரிமுல்ல பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அப்பகுதியிலுள்ள  நீரை குடிநீர்த்தேவைக்கு  பயன்படுத்த வேண்டாமென வைத்திய அதிகாரிகளால் அறிவுருத்தப்பட்டிருப்பதாக தெரிவித்ததையடுத்து உடனடியாக தனது சொந்த செலவில் அம்மக்களுக்கு முதற்கட்ட நடவடிக்கையாக 250 குடும்பங்களுக்கு  5லீற்றர் விகிதம் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டன.747a865e-1812-4dc8-bc8c-c4883a7fb550

 குறித்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு பூகொட பெப்பிலிவெல மஹாவிஹாரையில் தங்கியிருந்த மக்களை பார்வையிட்டதுடன் விஹாரையின் தலைவரான முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் பிரதியமைச்சர் துலிப் விஜய சேகரவுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், அந்த மக்களுக்கான உடனடி தேவைகள் ஏற்படும்போது தான் உதவுவதாகவும் வாக்குறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.c2a76c0d-9ef8-4d7b-8436-a026e10298d712b7d2e5-b353-41ef-ac65-077cfd77a585
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *