மும்பையை சேர்ந்த சுமிம் வாக்மாரே – பாக்யஸ்ரீ ஆகிய இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர்.
இருவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது, காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்ட பின்னரும் தங்களது கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளனர்.
ஆயிரம், ஆயிரம் கனவுகளுடன் காதல் தம்பதியினர் தங்களது இல்லற வாழ்க்கையை தொடங்கினர். அங்குள்ள வாடகை வீட்டில் குடியேறி வசித்தனர்.
திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் இருவரும் தேர்வு எழுதிவிட்டு திரும்பி வந்துள்ளனர். கல்லூரிக்கு வெளியே காரில் இருந்த 2 பேர் சுமித் வாக்மாரேவை ஏதோ கேட்பது போல் அழைத்தனர்.
இதனை நம்பி அவர் அவர்களை நோக்கி சென்றார். அப்போது, அந்த ஆசாமிகள் இருவரும் தாங்கள் காரில் மறைத்து வைத்திருந்த பெரிய வாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு காரில் ஏறி தப்பிச்சென்றனர்.
இதில், சுமித் வாக்மாரே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். தன் கண்முன்னேயே காதல் கணவர் வெட்டி சாய்க்கப்பட்டதை பார்த்து அவரது மனைவி,ரத்த வெள்ளத்தில் சரிந்த சுமித் வாக்மாரேயை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.
அவரை காப்பாற்றும்படி உதவிகேட்டு அலறினார். அங்கு திரண்ட கல்லூரி மாணவர்கள் உடனடியாக சுமித் வாக்மாரேயை மீட்டு பீட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கொலையாளிகளில் ஒருவர் மாணவி பாக்யஸ்ரீ யின் அண்ணன் பாலாஜி லாண்டே என்று தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.