Breaking
Mon. Nov 25th, 2024

ஆப்கானிஸ் தான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று ஆப்கானிஸ்தானின் மிக உயர்ந்த காஸி அமானுல்லா கான் விருது வழங்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரில் இந்தியா – ஆப்கானிஸ்தான் நட்புறவின் அடையாளமாக 1400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியா கட்டித்தந்துள்ள சல்மா அணைக்கட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இந்தியா-ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையில் நிலவும் நட்புறவின் அடையாளமாக 20 கிலோமீட்டர் நீளம், 3 கிலோ மீட்டர் அகலத்தில் தற்போது தரமுயர்த்தி கட்டிமுடிக்கப்பட்டுள்ள இந்த அணைக்கட்டின் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சுமார் 80 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாசன வசதியை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.201606041532533453_PM--Narendra-Modi-honoured-with-Ghazi-Amanullah-Khan-medal_SECVPF

இந்த விழா மேடையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் மிகவும் உயரியதாக கருதப்படும் காஸி அமானுல்லா கான் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *