ரமலான அல் அன்சி என்னும் கட்டுரையாளர், அல் ஜசீரா பத்திரிக்கையில் பொதுவாக கடவுளை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை கொண்டு அரசரை பாராட்டினார்.
அரசரை அளவிற்கு அதிகமாக புகழ்வது சகஜமான ஒன்றுதான் மேலும் அது எதிர்பார்க்கப்படும் ஒரு விஷயமும் கூட. ஆனால் கடவுளுடன் ஒப்பிடுவது என்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று. அதன் விளைவாக “மிகவும் அதிர்ச்சியடைந்த” அரசர் சல்மான், அன்சியை இடைநீக்கம் செய்ய உத்தரவு வழங்கியதாக செளதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
“இஸ்லாமியர்களின் இரண்டு புனித மசூதிகளாக கருதப்படும் மெக்கா மற்றும் மதினா ஆகியவற்றை பாதுகாக்கும் அரசரை குறித்து எழுத்தாளர் அவ்வாறு எழுதியது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. அரசருக்கு கடவுள் அத்தகைய குணங்களை கொடுத்திருந்தாலும், அவ்வாறு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது; இரண்டு புனித மசூதிகளை, இஸ்லாமை, மக்களை, தாயகம் மற்றும் மக்களை காப்பதனால் கடவுள் அவரை பாதுகாக்கட்டும்“ என அல் ஜசீரா தெரிவித்துள்ளது.