பிரதான செய்திகள்

அறிக்கை பைசர் முஸ்தபாவிடம் சமர்ப்பிப்பு

எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் இறுதி அறிக்கை இன்றையதினம் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையில் அக் குழுவின் உறுப்பினர்கள் ஐவரும் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னதாக கடந்த 2ம் திகதி குறித்த அறிக்கை அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் சமர்பிக்கப்படவிருந்த நிலையில், அதில் அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திடவில்லை என்பதால் அவர் அதனை ஏற்க மறுத்தார்.

பின்னரும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அக் குழுவில் நியமிக்கப்பட்டிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.மிஸ்பா இறுதி அறிக்கையில் கையெழுத்திடாமையை அடுத்து, அதனை சமர்ப்பிப்பதில் இழுபறி நிலை காணப்பட்டது.

இதுஇவ்வாறு இருக்க, அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ள நிலையில் இன்று குறித்த அறிக்கையை அமைச்சரிடம் கையளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

QR பதிவுகளை அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்கொள்ள முடியாது-அமைச்சர் கஞ்சன விஜேசேகர

wpengine

Northern Politicos Not Happy

wpengine

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine