பிரதான செய்திகள்

அரச, தனியார் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

தனியார் மற்றும் அரச சார்ப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் W.B.J.செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

தொழிலில் ஈடுபட்டுள்ள வேளையில் அனர்த்தங்களினால் ஏற்படும் மரணங்களுக்கு தற்போது ஐந்து இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. இந்த தொகை பத்து இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்படும்.

அவர்களது குடும்பத்தினருக்காக வழங்கப்படும் தொகை பத்து இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படவிருக்கிறது.

போகல சுரங்கம், பருப்பு தொழிற்சாலை ஆகியவற்றில் கடந்த ஆண்டு இணைக்கப்பட்ட தொழிலாளர்களின் மரணங்கள் குறித்த தன்னுடைய அமைச்சில் விவாதம் ஒன்று இடம்பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 246 தொழிற்சாலை தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இந்த விவாதத்தின் போது தெரியவந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அதற்கமைய இந்த அதிகரிப்பு மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பத்துப் பேருக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் அனைத்து ஊழியர்களுக்கும் காப்புறுதியை வழங்க நடவடிக்கை எடுப்பது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

Related posts

கண்டி,அம்பாறை மீதான தாக்குதல் ஐ.நா.வில் ஆவண திறைப்படம்

wpengine

மாவை சேனாதிராஜாவின் உடல், தீயுடன் சங்கமமானது மாவையின் உடல்!

Editor

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண் விரிவுரையாளர்!! JAFFNA NEWS TAMIL

Editor