மன்னார் மாவட்டத்தில் வெள்ளிமலை கிராமத்திற்கு சொந்தமான காணியில் அரிப்பு கத்தோலிக்கர் உருவ சிலை அமைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பின்புலத்தின் ஊடாக நிதியினை பெற்று அதற்கான சுற்றுமதில் அமைக்கும் வேலையினை ஆரம்பித்த நிலையில் இந்த வேலைத்திட்டத்தினை கண்டித்து நேற்று மாலை வெள்ளிமலை கிராம மக்கள் ஒன்று கூடி கண்டன தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி உள்ளதாக அறியமுடிகின்றது.
இன் நிகழ்வில் கருத்து தெரிவித்த செயற்பாட்டாளர்.
வெள்ளிமலை காணியினது முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணியாகவும் இதனை அயல் கிராம கத்தோலிக்கர் இங்குவந்து எமது காணியினை அபகரிக்க முடியாது.அது போன்று அவர்களுடைய உருவ சிலையினை அப்படிய வைத்து விட்டு கத்தோலிக்கர் சிலை வழிபாட்டில் ஈடுபட முடியும் அதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை ஆனால் அதனை சுற்றி சுற்றுமதில் அமைப்பதை எங்கள் உயிர் இருக்கும் வரை விட மாட்டோம்,அரிப்பு விளையாட்டு கழகத்திற்கு முஸ்லிம் மக்கள் வாழும் கத்தோலிக்கர்களுக்கு வழங்க கூடாது எனவும் அது போன்று அரிப்பு கிராமத்திற்கு அருகாமையில் பல வருடங்களுக்கு முன்பு எங்கள் மூதாயர்கள் வாழ்ந்த “மஞ்சப்பள்ளி”இருக்கின்றது.அதனை கூட நாங்கள் சட்ட ரீதியாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் எதிர்காலத்தில் அதில் எமது மத கடமையினை நிறைவேற்ற ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இதன் போது இந்த கூட்டத்திற்கு தாயக மண்ணில் இருந்து வருகை தந்த பண்டாரவெளி,மணற்குளம்,இலந்தைக்
முசலி பிரதேச செயலகத்தின் முன்னால் பிரதேச செயலாளர் எவ்வாறு அரிப்பு கிராமத்திற்கு மட்டும் 5ஏக்கர் காணிகளை யாருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாக முஸ்லிம்கள் வாழும் பகுதியில் காணியினை வழங்க முடியும்,இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் இது போன்று முசலி பிரதேசத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட விளையாட்டு கழகங்கள் இருக்கின்றது. அப்படி என்றால் ஏனைய கழகத்திற்கும் காணிகளை வழங்க வேண்டும் என ஆவேசத்துடன் பேசினார்கள் இந்த இடத்தில் கத்தோலிக்க மாற்றுமத சகோதர்களுக்கு காணி வழங்கினால் இன்று அல்லது நாளை அல்லது பல ஆண்டுகள் கடந்தாவது பாரிய இன பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை எமக்கு ஏற்படும் என தெரிவித்தனர்.
அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,வட மாகாண முதலமைச்சர்,மாகாண சபை உறுப்பினர்கள்,அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள் இந்த பிரச்சினையினை கருத்தில் கொண்டு தீர்த்து வைக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் இந்த விடயம் இன முறுகளுக்கான விடயமாக மாறும் என கிராம மக்கள் வேண்டுகோள்ள விடுக்கின்றார்கள்.