அரசியலமைப்பினை பயன்படுத்தி யாரும் காற்பந்து விளையாட முடியாது. அதேபோல அதனை தாம் விரும்பிய பக்கம் திருப்பவும் முடியாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
நாடாளுமன்றை கலைத்தலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான உயர் நீதிமன்றின் தீர்மானம் சற்று முன்னர் வெளியாகியுள்ள நிலையில்,
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சபாநாயகர் கரூ ஜயசூரிய நாடாளுமன்றின் சட்டத்தினை சம்பிரதாயத்தினை அவரது முயற்சியினால் காப்பாற்றியுள்ளார்.
இன்று நாம் பெற்ற வெற்றிக்காக அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். மக்களின் அடிபப்டை உரிமைகளை காப்பாற்ற இன்று நாம் முதல் வெற்றியினை பதவு செய்துள்ளோம்.
நாளைய தினம் நாடாளுமன்றம் கூடப்படும் எனத் தெரிவித்தது சபாநாயகர் கரூ ஜயசூரிய அல்ல, ஜனாதிபதி சிறிசேன ஆவார்.
நாளைய தினம் நாம் நாடாளுமன்றில் பெறும்பாண்மையினை நிரூபிப்பதற்கு தயாராகவுள்ளோம்.
இதேவேளை, நாளை மறுதினம் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று லிபட்டன் சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.