நல்லாட்சி அரசாங்கம் நல்லாட்சி கொள்கைகளை பின்பற்றுவதில்லை என தேசிய பிக்கு முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற முன்னணியின் பௌத்த பிக்குகள் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
பௌத்த பிக்குகள் மேலும் கூறுகையில்,
நாட்டை அபிவிருத்தி செய்வதாக வாக்குறுதி அளித்து ஆட்சி வந்த அரசாங்கம், இறைச்சிக்கடை வர்த்தகர்கள் தங்களது வாகனத்தில் புத்தரின் படத்தை ஒட்டி இறைச்சி விற்பனை செய்வதற்கு நிகரான காரியத்தை செய்கின்றார்கள்.
நல்லாட்சி என்ற பெயரைப் பயன்படுத்திக் கொண்டு அரசாங்கம் நாட்டின் வளங்களை விற்பனை செய்கின்றது.
நாட்டின் அபிவிருத்திக்காக உருவாக்கப்பட்ட 80 அரச நிறுவனங்கள் கடந்த ஆட்சியாளர்களினால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள சில அரசாங்க நிறுவனங்களை விற்பனை செய்ய ரணில் மைத்திரி அரசாங்கம் முயற்சிக்கின்றது.
கல்வித்துறையும் சுகாதாரத்துறையும் பணத்திற்காக விற்பனை செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலவச கல்வி நாட்டில் அமுல்படுத்தப்படுவதனால் அனைவரினாலும் கல்வி கற்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
எனவே நாட்டின் வளங்களை விற்பனை செய்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென தேசிய பிக்கு முன்னணியின் பௌத்த பிக்குகள் கோரியுள்ளனர்.