பிரதான செய்திகள்

அயர்லாந்து – இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி!

அயர்லாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸிற்காக 591 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து, தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பின்னர், Follow on முறையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அயர்லாந்து அணி இன்றைய 3ஆம் நாளில் 168 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இதனூடாக 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

Related posts

மின் பாவனையாளருக்கு சந்தோஷமான செய்தி

wpengine

ISIS தீவிரவாதிகளை வீழ்த்துவதில் முஸ்லிம்களுக்கு முக்கிய பங்குண்டு -அமெரிக்க அதிபர் ஒபாமா

wpengine

ஜோசப் ஸ்டாலினுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேசியுள்ளார்! கைது சட்டபூர்வமானது.

wpengine