பிரதான செய்திகள்

அமைச்சு தந்தால் குண்டர்களை முற்றாக அடக்கிக் காட்ட முடியும்.

சட்டம், ஒழுங்கு அமைச்சை தன் வசம் ஒப்படைத்தால் குண்டர்களை முற்றாக அடக்கிக் காட்ட முடியும் என்று அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வௌியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள சரத் பொன்சேகா, நாட்டில் குற்றச் செயல்கள் மலிந்து போயுள்ளது. குண்டர்களின் செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

இது தொடர்பாக சட்டம், ஒழுங்கு அமைச்சு பொறுப்புக் கூற வேண்டும்.
இவற்றைக் கட்டுப்படுத்துவதாக இருந்தால் சட்டம், ஒழுங்கு அமைச்சு சிறப்பாக செயற்பட வேண்டும்.

நீதித்துறையும் பொலிசாரும் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்பட வேண்டும்.

என்னிடம் சட்டம், ஒழுங்கு அமைச்சைக் கையளித்தால் சில நாட்களுக்குள்ளாகவே குண்டர்களை அடக்கிக் காட்ட முடியும் என்றும் சரத் பொன்சேகா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Related posts

அரச ஊழியர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்: சஜித் பிரேமதாச

wpengine

சுமந்திரன் (பா.உ) ஆளுனர் ஹிஸ்புல்லாவிடம் பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும்.

wpengine

மூன்று பெண்களை வைத்திருக்கும் ஞானசார தேரர்

wpengine