கட்டுரைகள்பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் இனவாதியா? சிங்கள மக்கள் ஆச்சரியம்

(ஜெமீல் அகமட்)
இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு ஆட்சி செய்த தலைவர்கள் அதிகாரம் கிடைக்கும் வரை சிறுபான்மை மக்களை ஏமாற்றிய சரித்திரமே உள்ளது அதனால்தான் கடந்த முப்பது வருடமாக நாட்டில் யுத்தம் நடைபெற்றது அதனால் நாடு பாரிய பொருளாதார நிலைக்கு தள்ளப்பட்டு மக்களும் நிம்மதி அற்ற வாழ்க்கையை எதிர்நோக்கி இருந்தனர் அந்த நிலையை பாரிய போராட்டத்தின் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு வந்தார் என்பதை நாம் யாரும் மறக்க முடியாது ஆனால் மக்கள் எதிர்  நோக்கி இருந்த  இனவாதத்தை அவரால் முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

யுத்த வெற்றியை நம்பிக்கை கொண்ட மஹிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்குள்  இனவாத சக்திகள் ஊடுருவியிருப்பதை கண்கனிக்க தவறியதால்  தான் சிங்கள ரவாய  பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் ஆதிக்கம் செலுத்தி முஸ்லிம்கள் மீது எதிர்ப்பு தெரிவித்து பேச ஆரம்பித்தனர்  அது இன்று நாடு மீண்டும் ஒரு இனம் இனவாத சக்திகளால் பாதிக்கப்படுமா? என்ற அச்ச  சூழ்நிலையை  ஏற்படுத்தியுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து விட்டது நாம் சுதந்திரமாக வாழலாம் என கணவு கண்ட சிறுபான்மை மக்களுக்கு அலுத்கம சம்பவம் என்பது ஓரு பேரதிர்ச்சியை கொடுத்தது அதனால் உப்பிட்டவனை மறக்க வேண்டிய நிலைக்கு முஸ்லிம் சமுதாயம் தள்ளப்பட்டது அதனால் துணிவுடன் செயல்பட்ட மஹிந்த ராஜபக்ச அவர்களை சிறுபான்மை மக்கள் புறக்கணித்து நாட்டில் இனவாதத்தை ஒழிக்க நல்லாச்சியை விரும்பி நாட்டின் தலைவனாக ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த மகனான மைத்திரிபால சிரிசேனாவை நம்பி வாக்கு அளித்து ஜனாதிபதியாக தெரிவு செய்தனர் அந்த வெற்றிக்கு சிறுபான்மை அரசியல்வாதிகளில் பல சவால்களுக்கு மத்தியில் தபால் வாக்கு பதியும் வரை பதுங்கி இருக்காமல் தூணிந்து முதலில் களமிறங்கியவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் அவர்கள் என்றால் மிகையாகாது இது  நாட்டு மக்களுக்கு தெரியும்.

அந்த வகையில் நல்லிச்சியை விரும்பிய முஸ்லிம்கள் கடந்த இரண்டு வருடமாக இனவாதிகளின் அச்சுருத்தல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் அதனால் இன்று அடிக்கடி முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் பள்ளிவாசல்கள் என்பன தீமூட்டி எரிக்கபடுகின்றன காணிகள் தொள்பொருள் நிலம் என சுவிகரிக்கபடுகின்றன இந்த நிலை தொடருமானால் நாட்டில் மீண்டும் ஒரு இனக்கலவரம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை எனவே மக்கள் நம்பிய நல்லாச்சியை அரசாங்கமும் ஜனாதிபதியும்  உறுதிப்படுத்த வேண்டும் தவறும் பட்சத்தில்  அது கடந்த கால வட கிழக்கு யுத்தாம் போல் இல்லாமல் நாட்டில் பரவலாக முஸ்லிம்கள் வாழ்வதால் முழு நாட்டிலும் யுத்தம் ஏற்படலாம் இப்படியான சூழ் நிலை வரக்கூடாது சகல மக்களும் இன ஐக்கியத்துடன் வாழ வேண்டும் என்று அமைச்சர் றிசாத் அவர்கள் இனஐக்கியத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார் அதற்காக இலங்கையின் உயர் சபையான பாராளுமன்றத்தில் பேசி வருகிறார் இன்றும் கூட நாட்டு மக்களும் அரசாங்கமும்   சிந்திக்க கூடிய காரசாரமான உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் அவரின் உரை நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று  இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினை பற்றி பேசுவதற்காக தமிழர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இருப்பது போல் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் இருப்பதாக சிலர் பேசிக்கொள்கின்றனர் ஆனால் அந்த முஸ்லிம் காங்கிரஸ் மறைந்த அதன் தாலைவர் அஸ்ரப் அவர்களின் சொற்ப கால அரசியல் வாழ்க்கையோடு சங்கமமாகி விட்டது  இன்று அது அரசோடு  பேசுவது எல்லாம் பதவி பணம் என்ற வங்குரோத்து அரசியல்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அதனால் இன்று மரம் வளர்ந்த மண்ணில் சருகுகள் காற்றில் பறக்கின்றன மரம் வளர்த்த மக்கள் கண்ணீருடன் கண் கலங்கி நிற்கும் போது அவர்களின் தூயர் துடைக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் #றிசாத் அவர்கள் போராடி வருகின்றார் அவர் போகும் பாதையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் பயனிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது அதனால் இன்று முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்பது அமைச்சர் றிசாத் அவர்களால் மட்டுமே பேச முடிகிறது அதனால் அவரின் கரத்தை பலப்படுத்த முஸ்லிம் சமுதாயம் இன்று முன் வந்து இருப்பது வரவேற்கதக்கது.

இன்று அமைச்சர் றிசாத் அவர்கள் மக்களின் நலனுக்காக அரசியல் செய்யும் ஒரு சிறந்த அரசியல்வாதி நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சிந்தனைவாதி என்பதால் அவரிடம் அரசாங்கம் பல பொறுப்புக்களை வழங்கியுள்ளது அன்மையில் இரத்தினபுரி மாவட்ட  அனர்த்த நிவாரன அமைப்பாளர் என்ற முக்கிய  பதவியை ஜனாதிபதி வழங்கியுள்ளார் அதனால் அமைச்சர் றிசாத் அவர்களின் நற்பன்புகள் சேவைகளை  கண்டு சிங்கிள மதபெரியோர்கள் மக்கள் இந்த மனிதனையா ஞானசேரா இனவாதி என கூக் குரல் இடுவது என ஆச்சரியமாக  பேசிக்கொள்கின்றனர்.

எனவே நாட்டில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்த்தால் முஸ்லிம் சமுதாயத்துக்கு துணிந்து குரல் கொடுக்க கூடிய தலைமை வேண்டும் அது இன்று மக்கள் விரும்பும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் அவர்கள் மட்டுமே இருக்கின்றார் இதை உணர்ந்து கொண்ட முஸ்லிம் வங்குரோத்து அரசியல்வாதிகளும் கூலிப்படைகளும் கண் கலங்கி நிற்கின்றனர் அவர்கள் மீண்டும் சமுதாயத்தை ஏமாற்ற பல வழிகளை கையாண்டு அபிவிருத்தி மில்லியன் என்ற போர்வையில் வலம் வருகின்றனர் அதற்கு இனிமேல் கிழக்கில் இடமில்லை.

அதனால் இன்று சமுதாயத்தை ஏமாற்றி கொண்டிருக்கும் ஹக்கீம் காங்கிரஸை கிழக்கு மண்ணிலிருந்து விரட்டியடிப்பதற்கு அரசியல் தலைமைகளும் சிவில் அமைப்புக்கள் கிழக்கு மண்ணில் பெரும்பாண்மை மக்களின் ஆதரவை பெற்றுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் தலைமைத்துக்கு பின்னால் கூட்டினைந்தால் மட்டுமே சாத்தியமாகும் இதை செய்யாவிட்டால் எதிர்கால சந்ததிகள் துரோகிகள் என முத்திரை குத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை இந்த தவறை செய்யாமல் விரைவில் நடைபெற இருக்கும் தேர்தலில் மயில் சின்னத்துக்கு வாக்களித்து எமது சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும்.

Related posts

பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

wpengine

அரசுக்கு எதிராக நாடு முழுவதும் கூட்டம் நடாத்த விமல் கூட்டணி மந்திர ஆலோசனை

wpengine

சமூக வலைத்தளத்தில் சிக்கிய நாமலின் காதலி

wpengine