பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் அமைச்சு பதவியில் இருந்து நீக்ககோரிய சிரேஷ்ட அமைச்சர்கள்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீனை பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் இதற்கான பொறுப்பினை அமைச்சர் ரிசாட் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் சிரேஸ்ட அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.

எனவே, அமைச்சர் ரிசாட்டை வர்த்தக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென கோரியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டுப்பாடு இன்றி அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைவதற்கான காரணம் அரசியல் சூழ்ச்சித் திட்டம் என சிரேஸ்ட அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளனர்.

அமைச்சர் ரிசாட்டை பதவியிலிருந்து நீக்கி பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தாவிட்டால் அரசாங்கம் எதிர்கால தேர்தல்களில் தோல்வியடையும் என தெரிவித்துள்ளனர்.

பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டங்களில் சிரேஸ்ட அமைச்சர்கள், அமைச்சர் ரிசாட்டிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விலை அதிகரிப்பினை கட்டுப்படுத்தாவிட்டால் இந்த விடயத்தில் தாம் தலையீடு செய்ய நேரிடும் என ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மொத்த விற்பனை சந்தையின் முக்கிய வர்த்தகர்கள் நான்கு ஐந்து பேரே நாட்டின் பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே அமைச்சர் ரிசாட் பதியூதீன் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு சிரேஸ்ட அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.

Related posts

அகில இலங்கை சமாதான நீதவான் சத்தியப்பிரமாணம்

wpengine

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் கருணா

wpengine

ஐயூப் அஸ்மின் தான்தோன்றி தனமாக பேசுகின்றார்-ஷிப்லி பாறூக்

wpengine