பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அமைச்சர் றிஷாட்டை விழ்த்த கூட்டமைப்புடன் ஒப்பந்தம்! ஹக்கீம் வெட்கம் இல்லையா?

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை)

ஒரு காலத்தில் தன் மானத்துடன் தலை நிமிர்ந்து அரசியல் செய்த மு.கா, இன்று தனித்துவம் அனைத்தையும் இழந்த ஒரு சில்லறை கட்சி போன்று இடத்துக்கு இடம் பல ரூபத்தில் தேர்தல் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் கூட மு.கா தனித்துவம் பேணி தனது கட்சியில் கேட்க முடியாத நிலையில் உள்ளது. இம்முறை போராளிகள் அனைவரும் தனித்து தேர்தல் கேட்க விரும்பிய போதும் தலைவர் வித விதமான முடிவுகளை அறிவித்துள்ளார். அட்டாளைச்சேனை மு.கா மத்திய குழு, இம்முறை மு.கா தனித்தே களமிறங்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை எல்லாம் ஓரளவு சகித்து கொள்ளலாம். இம்முறை மு.கா வன்னியில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தேர்தல் கேட்க முயற்சிக்கின்றது. இன்று மு.கா குழுவொன்று கொழும்பிலிருந்து உலங்கு வானூர்தியின் மூலம் மன்னாரும் சென்றுள்ளனர். தமிழ் மக்களின் வாக்குகளையும் இணைத்து கொண்டாவது வெற்றிபெற வேண்டிய இக்கட்டான நிலைக்கு மு.கா தள்ளப்பட்டுள்ளது. இது அமைச்சர் றிஷாதை எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்கான முயற்சியாக பார்க்கலாம்.

இவர்கள் இன்று உலங்கு வானூர்தி மூலம் மன்னார் சென்றிருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இன்று நடைபெற இருந்த கலந்துரையாடல் நடைபெறவில்லை. இதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இதில் பெரிதும் அக்கறை கொள்ளவில்லை என்ற விடயம் தெளிவாகிறது. அப்படி இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கூட்டமைப்புடன் இணைந்து செல்வது தொடர்பான நம்பிக்கையை தாங்கள் கைவிடவில்லை என மு.காவின் செயலாளர் நிஸாம் காரியப்பர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இக் கூற்றானது அவர்கள் இதில் அக்கறை கொள்ளாத போதும் இவர்கள் அவர்களது காலை பிடித்தாவது வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் இருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

அமைச்சர் றிஷாதை எதிர்கொள்ள தங்களது கட்சியின் தன் மானத்தை கூட விட்டுக் கொடுக்க தயாராகிவிட்டனர். மர்ஹூம் அஷ்ரப் ஸ்தாபித்த மு.காவானது முஸ்லிம்களிடத்தில் உயரிய மதிப்பை பெற்ற ஒரு கட்சியாகும். தற்போதைய மு.காவினருக்கு, மு.காவின் பழைய தன் மான வரலாறுகளை நினைவுபடுத்துவது பொருத்தமான அமையுமென நினைக்கின்றேன். ஒரு காலத்தில் தன் மானத்துடன் அரசியல் செய்த மு.காவானது இந்தளவு இழி நிலைக்கு தள்ளப்படும் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

Related posts

முஸ்லிம்களை ஏமாற்றுவதனால் தனது புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்தும் அரசாங்கம்.

wpengine

அப்பாவி முஸ்லிம்களை இலக்கு வைத்து வன்முறைகளை தூண்ட முயற்சி

wpengine

மியன்மார் பழங்குடியினர் மீது இரானுவம் தாக்குதல் 19 பேர் பலி

wpengine