Breaking
Sun. Nov 24th, 2024

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் )
வை.எல்.எஸ் ஹமீதின் பதிவுகளை நோக்கும் போது கண் பொஞ்சாதி ஒன்றுக்கும் இயலாமல் கிடக்கும் நிலையில் அனைவரையும் வாய்க்கு வந்தபடி திட்டி தீர்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. தனது இந்த நிலையை வை.எல்.எஸ் ஹமீத் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து கொள்கிறேன். ஒரு விடயத்துக்கு பதில் எழுதுவதானால் அவர் கேட்கும் அனைத்துக்கும் பதில் வழங்கப்பட வேண்டும். அவ்வாறல்லாமல் அவர் மீது ஆயிரமாயிரம் வினாக்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஒன்றை பிடித்துக்கொண்டு வை.எல்.எஸ் ஹமீத் பதில் எழுத முனைந்திருப்பதானது அவரது இயலாமையை சுட்டிக் காட்டுகிறது என்ற விடயத்தை தொட்டுக்காட்டியவனாய் அவரது பதில் கட்டுரைப்பகுதியினுள் நுழையலாம் என நினைக்கின்றேன்.

வினா – 01

முசலிப் பிரச்சினை தொடர்பாக இரண்டரை வருடங்களாக ஏன் ஜனாதிபதியுடன் பேசவில்லை என்ற வினாவை எழுப்பியதற்கு பகிரங்க விவாதங்களில் முழு நாடே அறியும் வண்ணம் பேசி ஜனாதியின் காதுகளை அடைந்திருக்கும் என பதில் அளிக்கின்றார்கள்? அப்படியானால் இவரை ஏன் மக்கள் பாராளுமன்றம் அனுப்பினார்கள்?

பதில்

முசலி பிரச்சினையெல்லாம் ஒரு பிரச்சினையல்ல. அமைச்சர் றிஷாத் தனது அரசியல் இலாபம் கருதியே அதனை பெரிதாக காட்டுகிறார் என்று கருத்து வெளியிட்டு வந்த வை.எல்.எஸ் ஹமீத், இது தொடர்பில் ஜனாதிபதியிடம் பேசுமாறு கூறியிருப்பதானது நகைப்பிற்குரியது. முசலிப் பிரச்சினை தொடர்பாக இரண்டரை வருடங்களாக ஏன் ஜனாதிபதியுடன் பேசவில்லை என்ற வினாவுக்கு அமைச்சர் றிஷாத் பகிரங்க விவாதங்களில் கலந்து கொண்டு ஜனாதிக்கு மாத்திரமல்ல அனைவருக்கும் இவ்விடயத்தை கொண்டு சேர்த்துவிட்டார் என்ற செய்தியையே கூற வந்தேன். இதற்கு அப்படியானால் எதற்கு பாராளுமன்றம் செல்ல வேண்டும்? என்று எனது கருத்தைக் கூட புரிந்துகொள்ள முடியாமல் வை.எல்.எஸ் ஹமீத் வினா எழுப்பியுள்ளார்.

அமைச்சர் றிஷாத் பகிரங்க விவாதங்களில் மாத்திரம் கலந்து கொண்டு விளங்கப்படுத்தினார் என நான் கூற வந்திருந்தால் வை.எல்.எஸ் ஹமீத்தின் வினா சரியாக அமைந்திருக்கும். எனக்கு அதிகமான வேலை இருந்ததன் காரணமாக எழுத்தை சுருக்கும் பொருட்டே அவ்வாறு கூறினேன். அமைச்சர் பாராளுமன்றங்களிலும் பேசியதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. அதனை காட்டினால் வை.எல்.எஸ் ஹமீத்தால் என்ன செய்ய முடியும்? அப்படியானால், இவரை ஏன் மக்கள் பாராளுமன்றம் அனுப்பினார்கள்? என்ற வினாவின் மூலம் தற்போது அமைச்சராக உள்ள றிஷாத் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் பேச வேண்டும் என்ற விடயத்தை கூறுகிறார். இதற்கு முன்பு அவர் எழுதிய “ கபடத் தனத்துக்கும் எல்லை இருக்கின்றது ” என்ற கட்டுரையையில் அமைச்சராக இருந்து கொண்டு இவ்வரசை இகழ்வது பயனற்றது, எமாற்றுக்குரியது என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இவர் அமைச்சர் றிஷாதை விமர்சிப்பதையே தனது கொள்கையாக கொண்டுள்ளாரே தவிர தன்னக்கென்று ஒரு நிலையான கொள்கை இல்லாததை அறிந்து கொள்ள முடிகிறது.

அமைச்சர் றிஷாத் முசலி மக்களின் காணிகள் தொடர்பில் பல தடவைகள் ஜனாதியிடம் பேசியுள்ளார். வை.எல்.எஸ் ஹமீத் தனது குறித்த பதிவில் ஜனாதிபதியை சந்திக்க சென்ற அமைச்சர் றிஷாத் ஜனாதியின் செயலாளரை சந்திக்க சென்றார் என்ற வினாவை எழுப்பியுள்ளார். இதன் மூலம் அமைச்சர் றிஷாத், ஜனாதிபதியை சந்திக்க முயற்சிப்பதை வை.எல்.எஸ் ஹமீத் தனது வாயாலேயே ஒப்புக்கொள்கிறார். முயற்சிகள் என்பது முதலில் பாராட்டத்தக்கதல்லவா?

வினா – 02

அமைச்சுப் பதவியுடன் இருந்து கொண்டு கதைத்தால் தான் எடுபடும் என்கிறார்களே! அப்படியானால் எதற்கு அமைச்சர் றிஷாத் பதவிகளை தூக்கிவீசுவேன் என்கிறார்?

பதில்

அமைச்சுப் பதவியை வைத்துக்கொண்டு விமர்சிப்பதற்கு அலாதித் துணிவு வேண்டும். தனது எதிரி மீது ஒருவர் குற்றம் சுமத்துவதற்கும் தனது பக்கத்தோடு உறவாடிக்கொண்டிருக்கும் ஒருவர் குற்றம் சாட்டுவதற்கும் இடையில் பாரிய வேறுபாடுள்ளது. இவர்களில் யாருடைய குற்றச்சாட்டு எடுபடும் என்பதை தெளிவு செய்யுமளவு வை.எல்.எஸ் ஹமீத் முட்டாளல்ல என நினைக்கின்றேன். அப்படியானால், அமைச்சர் றிஷாத் தனது பதவியை தூக்கி வீச தான் தயார் என ஏன் கூற வேண்டும்? இங்கு தான் எமது சிந்தனைகளை ஆழமாக்க வேண்டும்.

குறித்த அமைச்சுப் பதவியை வைத்துக்கொண்டு அமைச்சர் றிஷாத் இவ்வாட்சியாளர்களை விமர்சிப்பதன் காரணமாக அவரது அமைச்சுப் பதவியை வைத்துக் கொண்டு மாத்திரமே அவரை இவ்வாட்சியாளர்கள் முடக்க முயற்சிக்கலாம். இவ்வாறான நிலை வருகின்ற போது அமைச்சா/ சமூகமா என்ற நிலையில் அமைச்சர் றிஷாத் தனது அமைச்சுப் பதவியை தூக்கி வீசுவார் என்ற பொருளில் தான் குறித்த அமைச்சர் றிஷாதின் கூற்றை நோக்க வேண்டும். இன்று அமைச்சர் றிஷாத் இவ்வாட்சியலர்களை விமர்சிப்பதன் ஊடாக படிப்படியாக அமைச்சர் றிஷாத் தனது அமைச்சுப் பதவியை இழந்து கொண்டிருக்கின்றார் என்பதே உண்மையாகும். இதனை அண்மையில் அவருக்கு அதிகாரம் குறைந்த தபால் அமைச்சு வழங்கப்படும் என மு.காவைச் சேர்ந்தவர்கள் கூறித் திருந்தமையிலிருந்தே விளங்கிக்கொள்ளலாம். இவ்வாட்சியளர்கள் இவ்வரசிலிருந்து அமைச்சை ஒருவரை நீக்கும்/ புறக்கணிக்கும் போது அது கூட வேறு வடிவம் பெறும்.

வினா – 03

உங்கள் ஆதரவாளர்கள் நாகரீகமற்ற வார்த்தைகளை பிரயோகிக்கின்றார்களே! அவர்கள் கைகூலிகள் அல்ல ஆதரவாளர்கள் என்கின்றீர்கள். உங்கள் ஆதரவாளர்கள் எல்லாம் மூன்றாம் தர மனிதர்களா?

பதில்

முதலில் உங்களிடம் நாகரீகமற்ற வார்த்தைகள் பிரயோகிப்போர் அமைச்சர் றிஷாதின் ஆதரவாளர்கள் என யார் ஏற்றுக்கொண்டார்? நீங்கள் தான் என்னை, அமைச்சர் றிஷாத் கூலிக்கு ஆள் வைத்து விமர்சிக்கின்றார் என கூறித் திரிகிறீர்கள். அவர்கள் கூலிகள் அல்ல. ஆதரவாளர்கள் என்றே பலரும் பதில் வழங்கினர்.இதனை வேறு எங்கோ? ஏதோ? முடிச்சி போட்டு பதில் தருகிறீர்கள். உங்கள் சிந்தனை குழம்பிப் போய்விட்டது.

நான் உங்களுக்கு பதில் கட்டுரையை நாகரீகமாகவே எழுதியிருந்தேன். எனக்கு முகநூல் பேக் ஐடியில் இருந்து ஓரிருவர் மிகக் கேவலமாக எழுதியிருந்தனர். அதில் ஒன்று நீங்கள் பாவிக்கும் போலி முகநூலாகத் தான் இருக்க வேண்டும். அதைப் பற்றி அதனை நீங்கள் தான் செய்கிறீர்கள் என குற்றம் சாட்டுமளவு நான் மூடனல்ல. நீங்கள் கேட்டிருப்பது போன்று அது உங்கள் பிறப்பு குறைபாடா? வளர்ப்பு குறைபாடா? இடையில் வந்த குறைபாடா என கேட்க எனக்கு அதிக நேரம் எடுக்காது. வளர்ப்பை கேள்விக்குட்படுத்தி பேசுமளவு நான் வக்கிர புத்தியுள்ளவனல்ல.

ஒரு அமைச்சருக்கு/ கட்சிக்கு தனிப்பட்ட ஊடக பிரிவு காணப்படும். இது அமைச்சர் றிஷாத் மாத்திரம் செய்வதல்ல. மு.காவுக்கும் உள்ளது. உத்தியோக ஊடக பிரிவினர் கடமைக்காக ஊடக பணி செய்பவர்கள். அதனைத் தான் கூறியிருந்தேன்.

வினா – 04

உங்கள் ஆதரவாளர்கள் கட்சிக்குள் இருந்த போது, நான் ஏன் இவற்றையெல்லாம் பற்றி பேசாமல் இருந்தேன் என கேட்கின்றனர். நான் இவற்றை பற்றியெல்லாம் பேசாமலா இருந்தேன்? எத்தனை தடவைகள் பேசியுள்ளேன்.

பதில்

நான் ஒருபோதும் வாய் மூடி இருக்கவில்லை. அமைச்சர் றிஷாத் பதுளை, கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் விடயத்தில் சமூக துரோகம் செய்ய இருந்ததை நீங்கள் தான் போராடி தடுத்ததாக கூறியிருந்தீர்கள். இவரின் கூற்றுப்படி அமைச்சர் றிஷாத் சமூகத்து துரோகம் செய்யும் மன நிலை உடையவர். இதனை அறிந்தவுடன் அமைச்சர் றிஷாத் பற்றிய உண்மைகளை சமூகத்துக்கு கூறி அவரை விட்டு விலகியிருக்கலாமே! அப்போதெல்லாம் மாறாமல் தேசியப்பட்டியல் கிடைக்காமல் அமைச்சர் றிஷாத் உங்களை கட்சியை விட்டும் நீக்கிய பிறகே அவரைப் பற்றி சமூகத்துக்கு கூற வேண்டும் என்ற ஞானம் பிறந்ததன் மர்மம் என்ன? சிலருக்கு கஞ்சா அடித்தால் தான் ஞானம் வரும். உங்களுக்கு அதிகாரமும், பதவியும் பறி போன பிறகு தான் ஞானம் பிறக்குமோ?

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *